- Home
- Gallery
- நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடியே ரொமான்ஸில் தோத்துடும்... அட்லீ - பிரியா ஜோடியின் ரணகள ஹாட் போட்டோ ஷூட்!
நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடியே ரொமான்ஸில் தோத்துடும்... அட்லீ - பிரியா ஜோடியின் ரணகள ஹாட் போட்டோ ஷூட்!
அட்லீ மனைவி பிரியா உடல் எடையை குறைத்து, நயன்தாராவுக்கே டஃப் கொடுக்கும் விதத்தில் எடுத்து கொண்ட லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

முதல் படத்திலேயே தன்னுடைய வெற்றியை பதிக்கும் இயக்குனர்கள் ஒரு சிலரே அந்த லிஸ்டில், முக்கியமானவர் இயக்குனர் அட்லீ.
இயக்குனர் ஷங்கரின் உதவியாளரான இவர், நயன்தாராவை வைத்து இயக்கிய ராஜா ராணி திரைப்படம் விமர்சனங்களை தாண்டி வெற்றி வாகை சூடியது. இயக்குனர் மணிரத்னம் இயக்கிய 'மௌனராகம் படத்தின்' லேட்டஸ்ட் வெர்ஷனாகவே இப்படம் பார்க்கப்பட்டது.
வசூலில் பலமாக கல்லா கட்டிய 'ராஜா ராணி' படத்தை தொடர்ந்து தளபதி விஜய்யை வைத்து 'தெறி' படத்தை இயக்கினார் அட்லீ. இந்த படத்தில் மீனாவின் மகள் நைனிகா மற்றும் இயக்குனர் மஹேந்திரன் இருவரின் நடிப்பும், அதிகம் கவனிக்கப்பட்டது.
இந்த படமும் சத்திரியன் படத்தின் லேட்டஸ்ட் வெர்ஷனாக இருப்பதாக விமர்சனங்கள் எழுந்தது. எனவே அட்லீயை பலர் காப்பி இயக்குனர் என கலைக்கவும் துவங்கியது குறிப்பிடத்தக்கது.
ஆனால் வெற்றியை கொடுக்க வேண்டும் என்பதை மட்டுமே தன்னுடைய கோல்லாக வைத்திருந்த அட்லீ, மீண்டும்... மீண்டும் விஜய்யை வைத்து, மெர்சல், பிகில் ஆகிய படங்களை இயக்கி ஹார்டிக் வெற்றியை பதிவு செய்தார்.
அதிரடியாக கோலிவுட் திரையுலகிற்கு குட் பை சொல்லி விட்டு, பாலிவுட்டில் இறங்கிய, அட்லீ நடிகர் ஷாருக்கானை வைத்து இயக்கிய 'ஜவான்' திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி 1200 கோடிக்கு மேல் வசூல் செய்தது.
Actress Death: 39 வயதில்... பரிதாபமாக உயிரிழந்த பிரபல நடிகை! ரசிகர்கள் அதிர்ச்சி!
இயக்குனர் என்பதை தாண்டி, ஏற்கனவே சில தமிழ் படங்களை தயாரித்துள்ள அட்லீ... தெறி படத்தை 'பேபி ஜான்' என்கிற பெயரில் தற்போது தயாரித்து வருகிறார். இந்த படத்தில் வருண் தவான் ஹீரோவாக நடிக்க, சமந்தா வேடத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.
பாலிவுட் திரையுலகிற்கு சென்ற பின்னர்... மும்பையிலேயே அதிகம் வலம் வரும் ப்ரியா - அட்லீ ஜோடி அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி அதனை வெளியிடுவதையும் வழக்கமாக வைத்துள்ளனர்.
அந்த வகையில் தற்போது, நயன் - விக்கி ரொமான்டிக் ஜோடியையே பின்னுக்கு தள்ளும் விதத்தில், படு மாடர்ன் உடையில் இவர்கள் எடுத்து கொண்ட போட்டோ ஷூட் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.