- Home
- Gallery
- வேளாங்கண்ணி சர்ச்சுக்கு திடீர் விசிட் அடித்த அருண் விஜய்... வணங்கான் வெற்றிபெற வேண்டி மண்டியிட்டு பிரார்த்தனை
வேளாங்கண்ணி சர்ச்சுக்கு திடீர் விசிட் அடித்த அருண் விஜய்... வணங்கான் வெற்றிபெற வேண்டி மண்டியிட்டு பிரார்த்தனை
"ரெட்ட தல" படத்தின் படப்பிடிப்புக்காக வேளாங்கண்ணி சென்றுள்ள நடிகர் அருண் விஜய், அங்குள்ள பேராலயத்தில் பிரார்த்தனை செய்துள்ளார்.

vanangaan
பாபி பாலச்சந்திரன் தயாரிப்பில் 'ரெட்டதல' திரைப்படத்தில் நடித்து வருகிறார் அருண் விஜய். இப்படத்தை இயக்குனர் கிரிஷ் திருக்குமரன் இயக்கி வருகிறார். சாம் சிஎஸ் இசையமைக்கும் இப்படத்தில் நடிகர் அருண் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்க, அவருக்கு ஜோடியாக தான்யா ரவிச்சந்திரன், சித்தி இத்னானி ஆகியோர் நடிக்கின்றனர். 'ரெட்ட தல' படத்தின் இறுதிக்கட்ட சண்டைக் காட்சிகள் நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அருகே உள்ள அலையாத்தி காடுகள் நிறைந்த பகுதியில் படமாக்கப்பட்டு வருகிறது.
Retta Thala
இதனிடையே படப்பிடிப்பு ஓய்வு நேரத்தின்போது வேளாங்கண்ணி பேராலயத்திற்கு வந்த அருண் விஜய், அங்கு ஆரோக்கிய மாதா பேராலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்தார். அப்போது அவருக்கு பேராலய பங்குதந்தை அற்புதராஜ் ஆசி வழங்கினார். அதன் பின்னர் வேளாங்கண்ணி பேராலயத்தில் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து அருண் விஜய் பிராத்தனை செய்தார். வேளாங்கண்ணிக்கு அருண் விஜய் வந்ததை அறிந்த ரசிகர்கள் அவரை சூழ்ந்து கொண்டு போட்டி போட்டு செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
இதையும் படியுங்கள்... திருக்கடையூர் கோவிலில் மாமனார் மாமியாருக்கு விஜய ரத சாந்தி விழா - கணவருடன் பங்கேற்ற நடிகை நிக்கி கல்ராணி
Arun Vijay Visit Velankanni
அதன் பின்னர் தான் நடித்து வரும் 'ரெட்ட தல' திரைப்படம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அருண் விஜய், ஜனரஞ்சகமான திரைப்படங்களை ரசிகர்கள் விரும்புவதால், அதுபோன்ற கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து ஆக்சன் படத்தில் விரும்பி நடிப்பதாக கூறினார். ரெட்டை தல திரைப்படம் இதுவரை தான் ஏற்றிராத பாத்திரம் என்றும், வித்தியாசமான கதைக்களத்துடன் படம் தயாராகி வருவதாகவும் கூறினார்.
Arun Vijay Visit Velankanni Church
தொடர்ந்து பேசிய அவர், காலம் வரும்போது அப்பா முத்திரை பதித்த நாட்டாமை திரைப்படம் போல், நானும் நிச்சயம் ஒரு படத்தை தேர்ந்தெடுத்து நடிப்பேன் என கூறினார். வணங்கான் படம் பற்றி பேசுகையில், வணங்கான் படப் பணிகள் அனைத்தும் விரைவில் முடிய உள்ளது. அப்படத்தில் தான் ஏற்ற கதாபாத்திரத்தை மிகவும் காதலித்து நடித்தேன். இயக்குனர் பாலா அப்படத்திற்காக கூடுதலாக உழைத்திருக்கிறார். அவரது டைரக்சனில் நடித்தது சுகமான மற்றும் பிரமாதமான அனுபவமாக இருந்தது என்றார்.
இதையும் படியுங்கள்... நிஜமாவே கோல்டு-ணா நீ... புதிதாக BMW கார் வாங்கியதும் தங்கதுரை செய்த செயலுக்கு குவியும் பாராட்டு