- Home
- Gallery
- ஆர்த்தி ஒருவரையும் விட்டு வைக்கல.. ஜெயம் ரவியால் இதை தாங்கிக்க முடியல.. பிரபலம் சொன்ன டாப் சீக்ரெட்..
ஆர்த்தி ஒருவரையும் விட்டு வைக்கல.. ஜெயம் ரவியால் இதை தாங்கிக்க முடியல.. பிரபலம் சொன்ன டாப் சீக்ரெட்..
சினிமா பத்திரிகையாளர் அந்தனன் ஜெயம் ரவி – ஆர்த்தி விவகாரம் குறித்து பிரபல யூ டியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்தா

சினிமாப் பிரபலங்கள் விவாகரத்து செய்வது, பிரியப் போவதாக அறிவிப்பதும் புதிய விஷயம் இல்லை. அந்த வகையில் சமீபத்தில் ஜி.வி பிரகாஷ் – சைந்தவி தம்பதி விவாகரத்து அறிவிப்பை வெளியிட்டது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த வகையில் தமிழ் சினிமாவில் கடந்த சில நாட்களாகவே ஜெயம் ரவி – ஆர்த்தி விவகாரம் பேசு பெருளாக மாறி உள்ளது.
Aarti Jayam Ravi dismisses divorce reports
இந்த தம்பதி இடையே பிரச்சனை ஓடிக்கொண்டிருப்பதாகவும் இருவரும் விரைவில் விவாகரத்து செய்யவிருப்பதாகவும் தகவல் வெளியான வண்ணம் உள்ளன. தமிழ் சினிமாவில் எந்த கிசுகிசுவிலும் பெரிதாக சிக்காதவர் தான் ஜெயம் ரவி. தான் உண்டு, தனது குடும்பம், வேலை என எந்த சர்ச்சையிலும் சிக்காமல் இருந்து வந்தார்.
Jayam Ravi
ஜெயம் ரவி நடிப்பில் கடைசியாக வெளியான சைரன் படம் ஓரளவு வரவேற்பை பெற்றது. ஜெயம் ரவியின் மாமியார் இந்த படத்தை தயாரித்த நிலையில் முதலுக்கு மோசமில்லை என்ற அளவுக்கு படம் சுமாரான வெற்றியை பெற்றது.
இந்த சூழலில் கடந்த சில நாட்களாகவே ஜெயம் ரவிக்கும் அவரின் மனைவி ஆர்த்திக்கும் இடையே மனஸ்தாபம் இருந்து வருகிறதாம்.
Jayam Ravi
வெறும் வாக்குவாதமாக தொடங்கிய இந்த மனஸ்தாபம் இப்போது பெரும் சண்டையில் வந்து முடிந்துள்ளதாம். எனவே இருவரும் விரைவில் பிரிய போவதாக தகவல் வெளியான வண்ணம் உள்ளது. எனினும் ஜெயம் ரவியோ அல்லது ஆர்த்தியோ இந்த விவகாரத்தில் இதுவரை அமைதி காத்து வருகின்றனர்.
Jayam Ravi Wife Photoshoot
ஜெயம் ரவி தனது மாமியாரிடம் ரூ.25 கோடி சம்பளம் கேட்டதாகவும் அவர் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது. மேலும் ஜெயம் ரவி மாமியாரின் வளர்ப்பு மகனுக்கும் ஜெயம் ரவிக்கு ஈகோ பிரச்சனை தான் தற்போது ஆர்த்தி – ஜெயம் ரவி இடையே விவாகரத்துக்கான காரணம் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் சினிமா பத்திரிகையாளர் அந்தனன் ஜெயம் ரவி – ஆர்த்தி விவகாரம் குறித்து பிரபல யூ டியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர் “ ஜெயம் ரவி அவரிம் மாமியாரிடம் சம்பளம் கேட்டதெல்லாம் பெரிய பிரச்சனை இல்லை. உண்மையில் ஜெயம் மீது ஆர்த்திக்கு எப்போதுமே சந்தேகம் வரும்.
எனவே ஜெயம் ரவிக்கு ஆர்த்தி அடிக்கடி ஃபோன் செய்வார். ஒருவேளை ரவி ஃபோனை எடுக்கவில்லை என்றால், ஷூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் இயக்குனர் கேமராமேன், உதவி இயக்குனர் என ஒரு ஆளை கூட விட்டு வைக்க மாட்டார். எல்லோருக்கும் ஃபோன் பண்ணி ரவியை பற்றி விசாரிப்பார். ஒருவேளை யாருமே ஃபோனை எடுக்கவில்லை என்றால் நேரடியாக ஷூட்டிங் ஸ்பாட்டிற்கே கிளம்பி விடுவார்.
அவுட்டோர் ஷூட்டிங் என்றாலும் திடீரென அங்கு போய் நிற்பார். இப்படி ஜெயம் ரவியை ஆர்த்தி தொடர்ந்து வேவு பார்த்து வந்துள்ளார். ஒரு கட்டத்திற்கு மேல் ரவியால் இதனை தாங்கிக் கொள்ள முடியவில்லை.. அதனால் தான் பிரச்சனை தொடங்கியது” என்று தெரிவித்தார்.