ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு! யாரெல்லாம் பின்னணியில்? 7 மணிநேர விசாரணையில் நடந்தது என்ன?பால் கனகராஜ் பரபரப்பு தகவல்
பிரபல ரவுடி நாகேந்திரனுடன் தொடர்பில் இருந்தீர்களா என விசாரித்தார்கள். தொழில் நிமித்தமாக நாகேந்திரனுடன் பேசி இருக்கிறேன் என கூறினேன் என பால் கனகராஜ் தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளார்.
Armstrong Murder Case
பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் பாஜக மாநில துணை தலைவர் பால் கனகராஜ் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் உள்ள ரவுடிகள் தடுப்பு பிரிவில் நேற்று காலை 11 மணிக்கு நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
Paul Kangaraj
அவரிடம் 7 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடைபெற்றது. இதனையடுத்து வழக்கறிஞரும் பாஜக நிர்வாகியுமான பால் கனகராஜ் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக எல்லா கோணங்களிலும் என்னிடம் விசாரணை நடத்தப்பட்டது. குற்றவாளிகள் குறித்து துப்பு துப்பு தும் கிடைக்கலாம் என்ற கோணத்தின் அடிப்படையில் என்னை விசாரணைக்காக அழைத்து விசாரித்தனர். போலீஸ் கேட்ட எல்லா கேள்விகளுக்கும் முழுமையாக ஒத்துழைப்புடன் பதிலளித்தேன்.
இதையும் படிங்க: Amstrong : ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தை கொலை செய்வோம்.!மிரட்டல் கடிதம் எழுதிய பள்ளி தாளாளரை தட்டி தூக்கிய போலீஸ்
Paul Kangaraj investigation
நான் நடத்திய வழக்குகளில் குற்றவாளிகளாக இருந்தவர்கள் பெயரை குறிப்பிட்டு கேட்டு அவர்களுக்கு உண்டான தொடர்பு, அவர்கள் என்னிடம் பேசிய தொலைபேசி தகவல்கள் எல்லாம் வைத்து விசாரித்தனர். எனக்கும் ஆம்ஸ்ட்ராங்கிற்கும் எந்த விரோதமும் இருந்ததில்லை. 2015-ல் எனக்கும் ஆம்ஸ்டராங்குக்கும் சிறு கருத்து வேறுபாடு இருந்தது. அதுவும் ஒரே வாரத்தில் சரியாகி விட்டது. பின்னர் 2016 முதல் 2024 வரை நெருங்கி பழகி வந்தோம். இந்த கொலைக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என முடிவு செய்துள்ளார்கள். இந்த கொலையில் எனக்கு துளி அளவும் சம்பந்தம் இல்லை. கொலை செய்தவர்கள் யார் என எனக்கு நேரடியாக தெரியாது என்பதை தெளிவாக எடுத்து சொல்லி உள்ளேன்.
Sambo Senthil
கொலை வழக்கில் கைதான ரவுடிகள் நாகேந்திரன், சம்போ செந்தில் உள்ளிட்டோருக்கு வழக்கறிஞராக செயல்பட்டதால் பால் கனகராஜூக்கு சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.