MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • கல்யாணம் முடிந்த கையோடு கணவருடன் கோயிலில் சாமி தரிசனம்.. ஐஸ்வர்யா - உமாபதியின் க்யூட் போட்டோ....

கல்யாணம் முடிந்த கையோடு கணவருடன் கோயிலில் சாமி தரிசனம்.. ஐஸ்வர்யா - உமாபதியின் க்யூட் போட்டோ....

ஐஸ்வர்யா தனது இன்ஸ்டா பக்கத்தில் கணவர் உமாபதி உடன் இருக்கும் புதிய போட்டோவை பதிவிட்டுள்ளார்

2 Min read
Ramya s
Published : Jun 25 2024, 04:46 PM IST| Updated : Jun 26 2024, 04:10 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

90களில் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னட திரையுலகிலும் முன்னணி நடிகராக வலம் வந்தவர் ஆக்‌ஷன் கிங் அர்ஜுன். தமிழ் திரையுலகில். ரஜினி, கமல், விஜயகாந்த், சரத்குமார், கார்த்தி என பல ஹீரோக்கள் உச்சத்தில் இருந்த போதே தனக்கென தனி ரசிக பட்டாளத்தை வைத்திருந்தார் அர்ஜுன்.

28

ஒரு கட்டத்திற்கு பின் ஹீரோவாக நடிப்பதை நிறுத்திய அர்ஜுன், தற்போது நெகட்டிவ் ரோல், குணச்சித்திர கதாப்பாத்திரம் என தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் அவர் கடைசியாக லியோ படத்தில் நடித்திருந்தார். 

38

அர்ஜுனுக்கு ஐஸ்வர்யா, அஞ்சனா என 2 மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் ஐஸ்வர்யா பட்டத்து யானை என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.

48
Aishwarya Arjun - Umapathy Reception Photos

Aishwarya Arjun - Umapathy Reception Photos

பின்னர் ஒரு சில படங்களில் நடித்த அவருக்கு பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனிடையே பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சர்வைவர் தமிழ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியை அர்ஜுன் தொகுத்து வழங்கினார். 

58

இந்த நிகழ்ச்சியில் நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதியும் கலந்து கொண்டார். அப்போது உமாபதிக்கும் ஐஸ்வர்யாவுக்கு ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இந்த ஜோடி தங்கள் காதலை இரு வீட்டிலும் சொல்லி தங்கள் திருமணத்திற்கு சம்மதம் வாங்கினர். . 

68

இதை தொடர்ந்து கடந்த 10-ம் தேதி உமாபதி – ஐஸ்வர்யா திருமணம் நடைபெற்றது. கடந்த 14-ம் தேதி திருமண வரவேற்பு நடந்தது. இதில் ரஜினிகாந்த் பல்வேறு திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

 

78
aishwarya arjun

aishwarya arjun

ஐஸ்வர்யா - உமாபதி திருமணம், வரவேற்பு மற்றும் அதன்பின்னர் நடத்தப்பட்ட போட்டோஷுட் என பல போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. 

 

88

இந்த நிலையில் ஐஸ்வர்யா தனது இன்ஸ்டா பக்கத்தில் கணவர் உமாபதி உடன் இருக்கும் புதிய போட்டோவை பதிவிட்டுள்ளார். புதுக்கோட்டையில் உள்ள மலைக்கோவிலில் கணவருடன் சாமி தரிசனம் செய்ததாக பதிவிட்டுள்ளார். ரெட் கலர் சுடிதாரில் சிம்பிளாக ஹோம்லி லுக்கில் இருக்கிறார் ஐஸ்வர்யா. இந்த போட்டோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பலரும் புதுமண தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்

About the Author

RS
Ramya s
விஷுவல் கம்யூனிகேஷனில் இளங்கலை பட்டம் பெற்றுள்ள இவர் 2011 முதல் செய்தி ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். பல முன்னணி செய்தி சேனல்கள் மற்றும் டிஜிட்டல் செய்தி தளங்களில் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உள்ளது. தற்போது ஏசியா நெட் தமிழ் செய்தி இணையதளத்தில் மூத்த துணை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். லைஃப்ஸ்டைல், வணிகம், வேலைவாய்ப்பு, சினிமா ஆகிய தலைப்புகளில் மிகுந்த ஆர்வம் இருக்கும் இவர் வாசகர்களை ஈர்க்கும் வகையில் செய்திகளை எழுதி வருகிறார்.
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved