- Home
- Gallery
- உமாபதியை பார்த்து க்யூட்டாக வெட்கப்படும் ஐஸ்வர்யா.. புதுமண தம்பதியின் லேட்டஸ்ட் கிளிக்ஸ் இதோ..
உமாபதியை பார்த்து க்யூட்டாக வெட்கப்படும் ஐஸ்வர்யா.. புதுமண தம்பதியின் லேட்டஸ்ட் கிளிக்ஸ் இதோ..
சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட ஐஸ்வர்யா - உமாபதியின் திருமண போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

90களில் கொடிகட்டி பறந்த நடிகர்களில் முக்கியமாவர் ஆக்ஷன் கிங் அர்ஜுன். ரஜினி, கமல், விஜயகாந்த் பிரபு, கார்த்திக் என எத்தனை நடிகர்கள் இருந்தாலும் தனக்கென தனி ரசிக பட்டாளத்தை அர்ஜுன் வைத்திருந்தார்.
பிரபல நடிகர் அர்ஜுனுக்கு ஐஸ்வர்யா, அஞ்சனா என 2 மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் தான் ஐஸ்வர்யா. இவர் பட்டத்து யானை என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.
சில படங்களில் நடித்த அவருக்கு பெரிதாக வாய்ப்புகள் கிடைக்காத நிலையில், சின்னத்திரையில் எண்ட்ரி கொடுத்தார் ஐஸ்வர்யா. அர்ஜுன் தொகுத்து வழங்கிய சர்வைவர் தமிழ் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் தான் தம்பி ராமையாவின் மகன் உமாபதியும் கலந்து கொண்டார். அப்போது தான் ஐஸ்வர்யா - உமாபதி இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாற இருவரும் கொஞ்ச நாட்கள் டேட்டிங் செய்து வந்தனர். பின்னர் வீட்டாரின் சம்மதத்துடன் ஐஸ்வர்யா - உமாபதி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணம் மற்றும் வரவேற்பில் ரஜினி உள்ளிட்ட பல்வேறு திரைப் பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
ஐஸ்வர்யா - உமாபதி திருமணம், வரவேற்பின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. திருமணத்திற்கு பின்னர் ஐஸ்வர்யா உமாபதி தம்பதி கோயிலுக்கு செல்வது வீட்டில் சில சடங்குகளை செய்வது என பல போட்டோக்களும் வெளியாகி உள்ளன.
இந்த நிலையில் ஐஸ்வர்யா - உமாபாதி தம்பதியின் லேட்டஸ்ட் போட்டோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. இருவரும் படு ஸ்டைலிஷாக உடை அணிந்திருக்கும் அந்த போட்டோவில் உமாபதியை பார்த்து ஐஸ்வர்யா க்யூட்டாக வெட்கப்படுகிறார். இந்த போட்டோக்களுக்கு லைக்களும் கமெண்ட்களும் குவிந்து வருகிறது. மேலும் இந்த புதுமண தம்பதிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.