- Home
- Gallery
- புதிய ஜோடி ரெடி? காட்டிக்கொடுத்த டாட்டூ.. கல்கி 2898 AD பட நடிகை உடன் டேட்டிங் செய்யும் பிரபாஸ்?
புதிய ஜோடி ரெடி? காட்டிக்கொடுத்த டாட்டூ.. கல்கி 2898 AD பட நடிகை உடன் டேட்டிங் செய்யும் பிரபாஸ்?
சமீபத்தில் கல்கி 2898 ஏடி படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்த திஷா பதானி தனது டாட்டூ மூலம் இணையத்தில் புயலை கிளப்பி உள்ளார்.

2015-ம் ஆண்டு வெளியான லோஃபர் என்ற தெலுங்கு படத்தின் மூலம் தனது திரை வாழ்க்கையை தொடங்கியவர் திஷா பதானி. இதை தொடர்ந்து 2016-ம் ஆண்டு தோனியின் வாழ்க்கை வரலாற்று படமான எம்.எஸ் தோனி அண்டோல்டு ஸ்டோரி படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானர். அதில் தோனியின் காதலியாக நடித்திருப்பார்,
இந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து திஷாவுக்கு பட வாய்ப்புகள் குவிய தொடங்கியது. குங் ஃபு யோகா, பாஹி 2. பரத், மலங், பாஹி 3, ஏக் வில்லன் ரிட்டன்ஸ், ராதே உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.
சமீபத்தில் கல்கி 2898 ஏடி படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் திஷா பதானி நடித்திருந்தார். இந்த நிலையில் தனது டாட்டூ மூலம் இணையத்தில் புயலை கிளப்பி உள்ளார் திஷா படானி
திஷா தனது கையில் புதிய டேட்டூவை போட்டுள்ள படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதன் மூலம் அவர் நடிகர் பிரபாஸ் உடன் டேட்டிங் செய்கிறாரா என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றன. PD என்ற இன்ஷியல்களுடன் திஷா டாட்டூ போட்டுள்ளது தான் இதற்கு காரணம்.
இந்த டாட்டூவை பார்த்த ரசிகர்கள் PD பிரபாஸ், திஷாவை குறிக்கிறது என்று ஊகங்களை பதிவிட்டு வருகின்றனர். மேலும் பிரபாஸும் திஷாவும் டேட்டிங் செய்கிறார்களா என்றும் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றன. எனினும் இந்த தகவலை இதுவரை, பிரபாஸ் அல்லது திஷா இதை உறுதிப்படுத்தவும் இல்லை அல்லது மறுக்கவும் இல்லை.
திஷா சமீபத்தில் கல்கி 2898 AD இல் இந்திய சூப்பர் ஸ்டார் பிரபாஸுடன் இணைந்து நடித்திருந்தார். பிரபாஸ் - திஷாவின் ஆன்-ஸ்கிரீன் கெமிஸ்ட்ரிக்கு கூடுதலாக, படப்பிடிப்பின் போது பிரபாஸ் மற்றும் திஷாவின் ஆஃப்-ஸ்கிரீன் புகைப்படமும் கவனத்தை ஈர்த்தது.
இதற்கிடையில், பிரபாஸ், அமிதாப் பச்சன் மற்றும் தீபிகா படுகோனே, கமல்ஹாசன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான கல்கி 2898 ஏடி படம் பாக்ஸ் ஆபீஸில் சாதனை படைத்து வருகிறது. இதுவரை இந்த படம் உலகளவில் ரூ.600 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. ஜூன் 27ஆம் தேதி இந்தியாவில் வெளியான இப்படம், முதல் நாளிலேயே உலகம் முழுவதும் ரூ.191 கோடி வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.