- Home
- Gallery
- Raashii Khanna : பளிச்சென்ற உடையில்.. பளபளக்கும் கிளாமர்.. ராஷி கண்ணா கொடுத்த அசத்தல் போஸ் - ஹாட் பிக்ஸ்!
Raashii Khanna : பளிச்சென்ற உடையில்.. பளபளக்கும் கிளாமர்.. ராஷி கண்ணா கொடுத்த அசத்தல் போஸ் - ஹாட் பிக்ஸ்!
Actress Raashii Khanna : தமிழில் இந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய அளவில் ஹிட்டான அரண்மனை திரைப்படத்தின் 4ம் பாகத்தில் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை ஈர்த்தார் ராஷி கண்ணா.

Raashii
இந்திய தலைநகர் டெல்லியில் கடந்த 1990 ஆம் ஆண்டு நவம்பர் 30ஆம் தேதி பிறந்த நடிகை தான் ராஷி கண்ணா. அவருக்கு வயது 33. டெல்லியிலேயே தனது பட்டப்படிப்பை முடித்த ராஷி கண்ணா மாடலிங் துறையில் களமிறங்கினார்.
Raashii Khanna
முதலில் ஹிந்தி மொழி படங்களில் நடித்து வந்த ராஷி கண்ணா கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் தெலுங்கு திரை உலகில் தொடர்ச்சியாக பல படங்களில் நடித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
Actress Raashii
தமிழில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் "இமைக்கா நொடிகள்" திரைப்படம் தான் தமிழில் ராஷி கண்ணா நடித்த முதல் திரைப்படமாகும். தொடர்ச்சியாக தமிழில் "அடங்கமறு", "அயோக்கிய", "சங்கத்தமிழன்" "துக்ளக் தர்பார்" மற்றும் அரண்மனை 3 திரைப்படங்களில் அவர் நடித்திருந்தார்.
Actress Raashii Khanna
இறுதியாக தமிழில் அரண்மனை படத்தின் நான்காம் பாகத்தில் நடித்த ராஷி கண்ணா தற்பொழுது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளிலும் தொடர்ச்சியாக படங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.