School Student : அரசு பள்ளி மாணவர்களுக்கு ஜாக்பாட்.! சென்னை மாநகராட்சி வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு
தமிழக அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் திறன் மேம்பாட்டிற்காக வெளிநாட்டு மொழி கற்பிக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது. முதற்கட்டமாக சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பிரெஞ்சு மொழி கற்பிக்கப்பட உள்ளது. இந்த திட்டம் மாணவர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
கல்விக்கு முக்கியத்துவம்
கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் முக்கிய அம்சமாக நான் முதல்வன் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம், புதுமைப்பெண் திட்டம் என பல திட்டங்களின் மூலம் மாணவர்களுக்கு கல்வி மீதான ஆர்வத்தை அதிகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் இடை நிற்றலை குறைக்கவும் காலை உணவு திட்டமும் தொடங்கி சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் அடுத்த படியாக அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு வெளிநாட்டு மொழிகளை கற்கும் பாட திட்டம் தொடங்கப்படவுள்ளது.
பிரெஞ்ச் மொழி பாடம்
இதன் படி பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் அலையன்ஸ் ஃபிரான்சைஸ் ஆஃப் மெட்ராஸ் (Alliance Française of Madras) சார்பில் சென்னை பள்ளியில் பிரெஞ்சு மொழி கற்பித்தலை அறிமுகப்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU)மேயர் ஆர்.பிரியா, பிரான்ஸ் தூதரகத்தின் துணைத் தூதர் லிஸ் தால்போட் பாரே (Ms. Lise Talbot Barre Consul General) ஆகியோர் முன்னிலையில் கையெழுத்தானது.
அரசு பள்ளியில் பிரெஞ்ச் மொழி
இந்தத் திட்டமானது முதற்கட்டமாக மார்க்கெட் தெரு-சென்னை மேல்நிலைப்பள்ளி, சைதாப்பேட்டை -சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருவான்மியூர்-சென்னை மேல்நிலைப்பள்ளி மற்றும் பட்டேல் நகர்-சென்னை மேல்நிலைப்பள்ளி ஆகிய 4 பள்ளிகளில் தலா 20 மாணவர்கள் என 4 பிரிவுகளுக்கு விருப்பப் பாடமாக பிரெஞ்சு மொழி கற்றல் வகுப்புகள் முன்னோடித் திட்டமாக தொடங்கப்படவுள்ளது.
School College Holiday: நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. என்ன காரணம் தெரியுமா?
மாணவர்கள் ஆர்வம்
மாணவர்கள் ஜூனியர் லெவல் A2 வரை கற்பதே இதன் நோக்கமாகும். இது பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் அலையன்ஸ் ஃபிரான்சைஸ் ஆஃப் மெட்ராஸ் (Alliance Française of Madras) இடையிலான கலாச்சாரம் மற்றும் கல்வி வளர்ச்சியில் ஒரு குறிப்பிடத்தக்க படியாக அமையும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. பிரெஞ்சு மொழி கற்பிக்க மாநகராட்சி மேற்கொண்டுள்ள நடவடிக்கைக்கு மாணவர்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்துள்ளது.