- Home
- Gallery
- மரண பயத்தை காட்டிய பரணி... திருடிய நகைகளால் தூக்கமின்றி தவிக்கும் செளந்தரபாண்டி - அண்ணா சீரியல் அப்டேட்
மரண பயத்தை காட்டிய பரணி... திருடிய நகைகளால் தூக்கமின்றி தவிக்கும் செளந்தரபாண்டி - அண்ணா சீரியல் அப்டேட்
அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் பரணி சௌந்தரபாண்டியை வெட்ட போக ஷண்முகம் அவளை அலேக்காக வெளியே தூக்கி வந்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

Anna serial
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் பரணி சௌந்தரபாண்டியை வெட்ட போக ஷண்முகம் அவளை அலேக்காக வெளியே தூக்கி வந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
Zee Tamil Anna serial
அதாவது பாக்கியமும் இசக்கியும் பரணி பயங்கர ஆக்ரோஷமாக இருப்பதை பார்த்து என்னாச்சு என்று கேட்க, ஷண்முகம் பேய் பிடித்து இருப்பதாக சொல்லி சமாளிக்க அவர்கள் பரணியை சாமியாரிடம் கூட்டி வந்து வேப்பிலை அடிக்கின்றனர்.
இதனை தொடர்ந்து சௌந்தரபாண்டி முதல் முறையாக முத்துபாண்டியை நகைகள் இருக்கும் ரூமுக்கு அழைத்து சென்று ரூமை திறந்து காட்டி உண்மையை உடைக்க, அவன் நகைகள் இப்படியே இருந்தா மாட்டிக்குவோம், இது எல்லாத்தையும் உருக்கி தங்க பிஸ்கட்டுகளாக மாற்றிடலாம் என்று ஐடியா கொடுக்கிறான்.
இதையும் படியுங்கள்... சொந்தமாக தனி விமானம்.. குவிந்து கிடக்கும் சொகுசு கார்கள்- ராஜ வாழ்க்கை வாழும் ஜூனியர் NTRன் சொத்து மதிப்பு இதோ
Anna serial Update
அப்படியே மறுபக்கம் பரணி வீட்டில் சாமி வந்தது போல் ஆடி வைகாசி மாதத்தில் ஒரு தேதியை சொல்லி, இந்த நாள்ல ரத்னா கழுத்தில் தாலி ஏறி ஆகணும், அதே நாள்ல இன்னொரு நல்ல விஷயமும் நடக்கணும், அதை நேரம் வரும் போது சொல்லுவேன் என்று குறி சொல்லி சாமி மலையேறுவது போல் நடிக்கிறாள். அப்படியே மைண்ட் வாய்ஸில் இந்த நாள்ல ரத்னா கழுத்தில் தாலி ஏறும், ஆனால் அம்மா கழுத்தில் தாலி இருக்குமானு தெரியல என்று வருத்தப்படுகிறாள்.
Anna serial Today Episode
அதனை தொடர்ந்து சௌந்தரபாண்டி அடுத்து என்ன செய்வது? எப்படி நகையை காப்பாற்றி கொண்டு தப்பிப்பது என யோசித்து யோசித்து தூக்கம் வராமல் தவிக்கிறார். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மிஸ் பண்ணாம பாருங்க.
இதையும் படியுங்கள்... கோடியில் சம்பளம் வாங்கும் நடிகர் - நடிகைகளுக்கு ஆப்பு வைத்த மதுரை சினிமா சங்க விநியோகஸ்தர்கள்!