- Home
- Gallery
- செளந்தரபாண்டி போட்ட டிராமா எல்லாம் வேஸ்ட்... ஷண்முகம் தந்த ட்விஸ்டால் பதவியேற்ற பரணி - அண்ணா சீரியல் அப்டேட்
செளந்தரபாண்டி போட்ட டிராமா எல்லாம் வேஸ்ட்... ஷண்முகம் தந்த ட்விஸ்டால் பதவியேற்ற பரணி - அண்ணா சீரியல் அப்டேட்
அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் பரணி பதவியேற்பு விழாவில் சௌந்தரபாண்டிக்கு கை, கால் வராமல் போன நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

Anna serial
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் பரணி பதவியேற்பு விழாவில் சௌந்தரபாண்டிக்கு கை, கால் வராததால் கையெழுத்து போட முடியாது என்று முத்துப்பாண்டி சொல்லிய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
Zee Tamil Anna serial
அதாவது, சௌந்தரபாண்டி கையெழுத்து போட்டால் தான் பரணி பதவியேற்று கோவில் சொத்துக்களை பார்வையிட முடியும் என்று சொல்ல, சௌந்தரபாண்டி தரப்பு உடம்பு சரியாகும் வரை கையெழுத்து போட முடியாது என்று சொல்கின்றனர். ஷண்முகம் உன் அப்பனை இப்போ எப்படி ஓட விடுறேன் பாரு என்று சொல்ல, பரணி உடம்பு முடியாதவரை எதுக்கு இப்படி சொல்ற என்று கேள்வி கேட்க, ஷண்முகம் அவளை தனியாக அழைத்து சென்று சௌந்தரபாண்டு நாடகம் போடும் விஷயத்தை உடைக்கிறான்.
இதையும் படியுங்கள்... மணப்பெண், மணமகன் தேவை... தமிழகத்தை கலக்கிய வைரல் போஸ்டருக்கு பின்னணியில் இருப்பது யார்? உடைந்தது சஸ்பென்ஸ்
Anna Serial Update
இதையடுத்து ஷண்முகம் சௌந்தரபாண்டியால் கையெழுத்து போட முடியலைன்னா என்ன? அவர் ஏற்கனவே கையெழுத்து போட்டு கொடுத்துட்டாரு என்று சொல்ல, எல்லாரும் ஷாக் ஆகின்றனர், பதவியில் இருப்பவருக்கு உடம்பு முடியாமல் போய்விட்டால் அவருக்கு பதிலாக அவரது மனைவி கையெழுத்து போடலாம், அதான் என் அத்தை நேத்தே கையெழுத்து போட்டு கொடுத்துட்டாங்க என்று சொல்ல, பாக்கியம் டாகுமெண்ட்டுடன் வருகிறாள்.
Anna serial Today Episode
இதை பார்த்து அதிர்ச்சியாகும் சௌந்தரபாண்டி பக்கவாத நாடகத்தால் எதுவும் செய்ய முடியாமல் இருக்க, பரணி தர்மகத்தாவாக பதவி ஏற்கிறாள், இதனால் அடுத்து என்ன நடக்குமோ என்ற பயத்துடன் சௌந்தரபாண்டி வீல் சேரில் வெளியே வர ஷண்முகம் எதிரே வந்து உங்களை ஓட விடுறேனு சொன்னேனே செய்ய வேண்டாமா என்று கேட்கிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை மிஸ் பண்ணாம பாருங்க.
இதையும் படியுங்கள்... இது நல்லாருக்கே... தல போஸில் தளபதி! கல்வி விருது விழாவில் அஜித் ரசிகையின் ஆசையை நிறைவேற்றிய விஜய்