- Home
- Gallery
- Anna Serial: பதவி ஏற்க வந்த பரணி எடுத்த சபதம்..! சௌந்திரபாண்டிக்கு ஆப்பு மேல ஆப்பு - அண்ணா சீரியல் அப்டேட்..!
Anna Serial: பதவி ஏற்க வந்த பரணி எடுத்த சபதம்..! சௌந்திரபாண்டிக்கு ஆப்பு மேல ஆப்பு - அண்ணா சீரியல் அப்டேட்..!
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் பரணியும் சண்முகமும் சௌந்தரபாண்டியை பதவியேற்பு விழாவுக்கு அழைத்து செல்ல முடிவெடுத்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது, சௌந்தரபாண்டி எனக்கு உடம்பு முடியல, வர மாட்டேன் என்று சொல்ல ஷண்முகம் வீல் சேரை கொண்டு வந்து சௌந்தரபாண்டியை உட்கார வைத்து அழைத்து செல்கிறான்.
அடுத்ததாக சௌந்தரபாண்டியுடன் ஷண்முகம் கோவிலுக்கு வர ஒருத்தரும் சௌந்தரபாண்டியை கண்டு கொள்ளாமல் இருக்கின்றனர். இதனால் சௌந்தரபாண்டி நான் தர்மகத்தாவாக இருந்த போது எல்லாரும் வாசல் வரைக்கும் வந்து வணக்கத்தை வச்சி கூட்டிட்டு போவாங்க, ஆனால் இப்போ ஒருத்தனும் கண்டுக்க மாட்டுறான் என்று கடுப்பாகிறார்.
Matka Movie: 15 கோடி பணத்தை கொட்டி வைஸாக் நகரை உருவாக்கிய 'மட்கா' படக்குழு!
மேலும் பரணிக்கு பெரிய வரவேற்பு கொடுத்து எங்க புள்ளைங்க எல்லாம் இன்னைக்கு உயிரோட இருக்க நீங்க தான் காரணம், நீங்க நல்லா இருக்கனும். நீ பதவி ஏற்று கோவில் நிர்வாகத்தை சிறப்பா நடத்தணும் என்று வாழ்த்து சொல்கின்றனர்.
Anna Serial
கோவில் பூசாரி முதலில் உங்க பேருக்கு அர்ச்சனை பண்ணிட்டு அதுக்கு அப்புறம் பதவி ஏற்று கொள்ளுங்கள் என்று சொல்ல பரணி சூடாமணி பெயருக்கு அர்ச்சனை செய்ய சொல்ல அனைவரும் ஷாக் ஆகின்றனர். சூடாமணி ரொம்ப நல்லவங்கனு நான் கூடிய சீக்கிரம் ஆதாரத்தோடு நிரூபித்து காட்டுறேன் என்று சொல்கிறான்.
Anna serial
அடுத்து கோவிலில் பதவி ஏற்பதற்கான ஏற்பாடுகள் நடக்க ஜெயிலில் சூடாமணி பரணியை நினைத்து சந்தோசப்பட்டு கொண்டிருக்கிறாள், இந்நேரம் என் மருமகள் பதவி ஏற்று இருப்பாள் என்று சந்தோசத்தோடு இருக்கிறாள், இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.