கன்பியூஸ் ஆன பரணி... டிராமா பண்ணி தப்பினாரா சௌந்தரபாண்டி? - அண்ணா சீரியல் அப்டேட்
அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் சௌந்தரபாண்டி பக்கவாதம் வந்தது போல் நடித்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

Anna serial
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சௌந்தரபாண்டி பக்கவாதம் வந்தது போல் நடிக்க தொடங்க, ஷண்முகம் ஹாஸ்பிடலுக்கு தூக்கி செல்ல, முத்துபாண்டியும் பாண்டியம்மாவும் தடுத்து நிறுத்திய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
Zee Tamil Anna Serial
அதாவது, சௌந்தரபாண்டி ஹாஸ்ப்பிடல் எல்லாம் வர மாட்டேன் என்று அடம் பிடிக்க, முத்துபாண்டியும் பாண்டியம்மாவும் அவன் தான் வர மாட்டேன்னு சொல்றான்ல, இங்கயே வச்சி வைத்தியம் பாரு.. அதுக்கு தானே உன்னை டாக்டருக்கு படிக்க வச்சான் என்று எமோஷனல் பிளாக் மெயில் செய்கின்றனர். ஷண்முகம் அவரை பிடிக்காத நானே அவரை ஹாஸ்பிடலுக்கு கொண்டு போகணும்னு நினைக்கிறேன் நீங்க என்ன வேண்டாம் வேண்டாம்னு சொல்லிட்டு இருக்கீங்க என்று திட்டுகிறான்.
இதையும் படியுங்கள்... Jason Sanjay in Goat: 'கோட்' படத்தில் தளபதியுடன் நடித்திருக்கும் சஞ்சய்! பட் இந்த ட்விஸ்ட் புதுசு கண்ணா புதுசு
Anna Serial Update
பிறகு பரணி ஒரு டாக்டரா நான் கடமையை செய்திட்டு கிளம்பறேன் என்று சொல்லி சௌந்தரபாண்டியை செக்கப் செய்கிறாள். ஆனால் பக்கவாதம் ஏற்பட அவரது உடம்பில் எந்த அறிகுறியும் இல்லாத நிலையில், பரணி இது எப்படி நடந்தது என்று கன்பியூஸ் ஆகிறாள். இதையடுத்து பரணி சௌந்தரபாண்டிக்கு ஊசி போட்டு விட்டு அப்பாவுக்கு இப்படி ஆகிருச்சே என்ற வருத்தததோடு கிளம்பி வருகிறாள்.
Anna serial Today Episode
இதே வருத்தத்தில் சாப்பிடாமல் தூங்கி விட, எல்லாரும் சாப்பிடாமலேயே இருக்கின்றனர், பரணி நைட் திடீரென எழுந்து கொள்ள, ஷண்முகம் அவளுக்கு ஆறுதல் சொல்கிறான். அடுத்து பரணி யாரும் சாப்பிடவில்லை என்பதை அறிந்து எல்லோரையும் எழுப்பி சாப்பிட வைக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மிஸ் பண்ணாம பாருங்க.
இதையும் படியுங்கள்... பாலகிருஷ்ணாவை நேரில் சந்தித்து திருமண அழைப்பிதழ் கொடுத்த வரலட்சுமி சரத்குமார் - வைரலாகும் போட்டோஸ்