- Home
- Gallery
- பதவி ஏற்க ரெடியாகும் பரணி... தில்லுமுல்லு வேலையால் மரண பீதியில் சௌந்தரபாண்டி - அண்ணா சீரியல் அப்டேட்
பதவி ஏற்க ரெடியாகும் பரணி... தில்லுமுல்லு வேலையால் மரண பீதியில் சௌந்தரபாண்டி - அண்ணா சீரியல் அப்டேட்
அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் சௌந்தரபாண்டி சனியனை கொல்ல முயற்சி செய்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

Anna Serial
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினம்தோறும் இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் சௌந்தரபாண்டி சனியனை கொல்ல முயற்சி செய்ய சண்முகத்தின் அட்வைஸால் அது நடக்காமல் போன நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது, சண்முகம் குடும்பத்தில் எல்லோரும் சந்தோஷமாக இருக்க அப்போது ஊர் பெரியவர்கள் வீட்டிற்கு வந்து தர்மகத்தா தேர்தல்ல நீங்க தான் ஜெயிச்சு இருக்கீங்க எப்ப பதவி ஏத்துக்க போறீங்க என்று கேள்வி எழுப்புகின்றனர்.
Zee Tamil Anna Serial
பரணி நாளைக்கே ஏத்துகிறேன் என்று சொல்ல இந்த விஷயம் அறிந்த சௌந்தரபாண்டி அதிர்ச்சி அடைகிறார். பரணி பதவி ஏத்துக்கிட்டா கணக்கு வழக்கு எல்லாம் கொடுக்கணும். கூட இருக்கும் அதிகாரிகள் கணக்கு வழக்கை செக் பண்ணா நகை திருடு போன விஷயம் எல்லாம் தெரிய வந்துடும். அதனால இதை எப்படியாவது தடுத்து நிறுத்தணும் என யோசிக்கிறார்.
இதையும் படியுங்கள்... Atlee : சூப்பர்ஸ்டாரை வைத்து பான் இந்தியா படம்... ஆயிரம் கோடிக்கு அட்லீ போட்ட ஸ்கெட்ச்; ஓகே சொல்வாரா ரஜினி?
Anna Serial Update
அதன் பிறகு திடீரென கை கால் இழுத்துக் கொண்டது போல நாடகம் போட அதை பார்த்து எல்லோரும் பதறி போய் பரணிக்கு போன் போட்டு வீட்டுக்கு வர சொல்கின்றனர். சௌந்தரபாண்டியை பரிசோதனை செய்த பரணி உடம்புல எந்த பிரச்சனையும் இல்லை, அப்படி இருந்தும் ஏன் இப்படி ஆகுதுன்னு தெரியல.. ஹாஸ்பிடல் கொண்டு போய் தான் பார்க்கணும் என்று சொல்கிறாள்.
Anna Serial Today Episode
ஆனால் சௌந்தரபாண்டி ஹாஸ்பிடலுக்கு போனால் நடிப்பு உறுதியாக விடும் என்பதால் வீட்டிலேயே வைத்தியம் பார்க்க சொல்கிறார். அதெல்லாம் வேண்டாம் மாமாவை நான் ஆஸ்பிட்டல் கூட்டிட்டு போறேன் என்று சண்முகம் அலேக்காக தூக்கிக் கொண்டு கிளம்ப, முத்துப்பாண்டி, பாண்டியம்மா ஆகியோர் சண்முகத்தை தடுக்க முயற்சி செய்கின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை மிஸ் பண்ணாம பாருங்க.
இதையும் படியுங்கள்... Goat Movie: 'கோட்' படத்தில் மறைந்த பாடகி பவதாரிணியின் குரலுக்கு AI தொழில்நுட்பத்தின் மூலம் உயிரூட்டிய யுவன்!