- Home
- Gallery
- வாக்கு எண்ணிக்கையின் போது நடந்த ட்விஸ்ட்... ஜெயித்தது பரணியா? செளந்தரபாண்டியா? - அண்ணா சீரியல் அப்டேட்
வாக்கு எண்ணிக்கையின் போது நடந்த ட்விஸ்ட்... ஜெயித்தது பரணியா? செளந்தரபாண்டியா? - அண்ணா சீரியல் அப்டேட்
அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் தேர்தல் முடிந்து ஓட்டுக்களை எண்ண தொடங்கிய நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

Anna serial
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிப்பரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் தேர்தல் முடிந்து ஓட்டுக்களை எண்ண தொடங்கிய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது, முதல் ஓட்டில் தொடங்கி அடுத்தடுத்த ஓட்டு என்று மொத்தமும் பரணிக்கு விழ சௌந்தரபாண்டி அதிர்ந்து போகிறார், குழந்தையை கடத்திய பிறகு இதெல்லாம் எப்படி நடந்தது என்று குழப்பம் அடைகிறார்.
Zee Tamil Anna Serial
இந்த நேரத்தில் ஷண்முகம் என்ன மாமா எப்படி நடந்ததுனு யோசிக்கிறீர்களா என்று சொல்லி பிளாஷ்கட்டை ஓபன் செய்கிறான். ஷண்முகம் ஆதார் அட்டை எடுக்க போய் வர லேட்டாச்சுல ஏன் தெரியுமா என்று காரணத்தை உடைகிறான். கனியை வைத்து சனியனின் பேரனை, அண்ணன் பேட் வாங்கி தருவார் என்று அழைத்து வர வைக்கிறான். அவன் அண்ணா எனக்கு மட்டும் பேட் வாங்கி தரல என்று சொல்ல வாடா இப்பவே வாங்கி தரேன் என்று அழைத்து செல்கிறான்.
இதையும் படியுங்கள்... அப்பா உடன் அவுட்டிங்... லண்டனில் ஜோடிப் புறாக்களாக வலம் வரும் கவிதா மற்றும் அனிதா விஜயகுமார் - போட்டோஸ் இதோ
Anna Serial Update
ஆனால் ஒன்னு நான் போனை உன் கிட்ட கொண்டு வரும் போது ஐயோ அம்மா காப்பாத்துங்கனு கத்தனும். அப்போ தான் வாங்கி தருவேன் என்று சொல்ல, அவனும் எப்படி கத்துறேன்னு மட்டும் பாருங்க என்று சொல்கிறான். அவனது உடம்பு முழுக்க வெடி மருந்தை கட்டி விட்டு சனியனுக்கு வீடியோ கால் செய்கிறான். பேரன் ஐயோ அம்மானு கத்துறதை பார்த்து சனியன் அதிர்ச்சி அடைய, ஷண்முகம் உங்க கஷ்டடியில் இருக்க எல்லா பிள்ளைகளையும் ரிலீஸ் செய்து உங்க குழந்தைகளை விட்டாச்சு.. எல்லாரும் பரணிக்கு ஓட்டு போடுங்கனு வீடியோ எடுத்து அனுப்பு என்று மிரட்ட, சனியனும் அப்படியே செய்தது தெரிய வருகிறது.
Anna serial Today Episode
இதை கேட்டு சௌந்தரபாண்டி அதிர்ச்சியடைய, ஷண்முகம் குடும்பம் மொத்தமும் சந்தோசப்படுகிறது. கூடிய சீக்கிரம் உங்களை ஜெயிலில் வந்து பார்க்குறோம் என்று மிரட்டி விட்டு கிளம்பி வருகின்றனர். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மிஸ் பண்ணாம பாருங்க.
இதையும் படியுங்கள்... தியேட்டரில் வசூல் வேட்டை நடத்திய சூரியின் கருடன் படத்தை OTTக்கு பார்சல் பண்ணி அனுப்பிய படக்குழு- எப்போ ரிலீஸ்?