- Home
- Gallery
- அண்ணா சீரியல் : இந்த முறை மிஸ் ஆகாது... புது பிளான் உடன் களமிறங்கும் செளந்தரபாண்டி; தேர்தலில் புது ட்விஸ்டா?
அண்ணா சீரியல் : இந்த முறை மிஸ் ஆகாது... புது பிளான் உடன் களமிறங்கும் செளந்தரபாண்டி; தேர்தலில் புது ட்விஸ்டா?
அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் சௌந்தரபாண்டியை சண்முகம், பரணி தேடிப்பிடித்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

Anna serial
தமிழ் சின்னத்திரை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினம்தோறும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் சௌந்தரபாண்டி 20 நிர்வாகிகளை கடத்தி வைத்திருக்க சண்முகம், பரணி ஆகியோர் 20 நிர்வாகிகளின் மனைவிகளுடன் சம்பவ இடத்திற்கு கிளம்பிய நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது, சௌந்தரபாண்டி மும்பையில் இருந்து இறக்கி இருந்த பெண்ணை டான்ஸ் ஆட விட குடிபோதையில் நிர்வாகிகள் சந்தோஷமாக ஆடி பாடிக் கொண்டிருக்க, திடீரென பாட்டு நிறுத்தப்பட அனைவரும் திரும்பி பார்க்க அங்கே சண்முகம் நிற்கிறான்.
Zee Tamil Anna serial
இங்கே 20 பேர் இருக்கீங்க ஒரே ஒருத்தர் மட்டும் டான்ஸ் ஆடினால் எப்படி? அதான் நான் 20 பேரை இறக்கி இருக்கேன் என்று சொல்ல, முதலில் பாக்கியம் அந்த இடத்திற்குள் என்ட்ரி கொடுத்து டான்ஸ் ஆட, அதை பார்த்து சௌந்தரபாண்டி, முத்துப்பாண்டி ஆகியோர் அதிர்ச்சி அடைகின்றனர். சௌந்தரபாண்டி யாரும் பாக்காதீங்க அது என் பொண்டாட்டி என்று சத்தம் போட்டும் போதையில் எல்லோரும் சேர்ந்து குத்தாட்டம் போடுகின்றனர்.
இதையும் படியுங்கள்... 'சூரரைப் போற்று' இந்தி ரீமேக்கில் நடிப்பில் சூர்யாவை மிஞ்சினாரா அக்ஷய் குமார்? 'Sarfira' பட ட்ரைலர் இதோ!
Anna serial Update
அதைத்தொடர்ந்து இசக்கி என்ட்ரி கொடுத்து அவளது பங்குக்கு ஆட்டம் போட, முத்துப்பாண்டி அதிர்ந்து போகிறான். பிறகு 20 நிர்வாகிகளின் மனைவிகளும் உள்ளே புகுந்து டான்ஸ் ஆடி அவர்களை போட்டு அடித்து துவைத்து அழைத்துச் செல்கின்றனர். இதனால் சௌந்தரபாண்டியின் திட்டம் மொத்தமும் பாழாகிறது. பாக்கியமும் இசக்கியும் சௌந்தரபாண்டி மற்றும் முத்து பாண்டியை ஓட்டுக்காக இவ்வளவு கேவலமா இறங்கிட்டீங்க என்று திட்டி விட்டு கிளம்பி செல்கின்றனர்.
Anna serial Today Episode
வீட்டுக்கு வந்த இவர்கள் இனிமே ஈஸியாக ஜெயிச்சிடலாம் என்று சந்தோஷப்பட, சௌந்தரபாண்டி இந்த திட்டம் சொதப்பினா என்ன? என்கிட்ட இன்னொரு திட்டம் இருக்கு என்று சொல்கிறார். சனியனிடம் 20 நிர்வாகிகளின் பிள்ளைகளையும் கடத்த சொல்லி தனது திட்டத்தை சொல்ல, அடுத்த நாள் தேர்தலுக்கான வேலைகள் பரபரப்பாக நடக்கிறது. இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை மிஸ் பண்ணாம பாருங்க.
இதையும் படியுங்கள்... முரட்டு சிங்கிளாக தனது 38வது பிறந்தநாளை கொண்டாடிய நடிகை அஞ்சலி... அதுவும் இந்த நாட்டிலா? வைரலாகும் போட்டோஸ்