- Home
- Gallery
- அண்ணா சீரியல் : ரிசார்ட்டில் பாம்பே கேர்ள்ஸ் உடன் கும்மாளம்... செளந்தரபாண்டியை பொறி வைத்து பிடித்த சண்முகம்
அண்ணா சீரியல் : ரிசார்ட்டில் பாம்பே கேர்ள்ஸ் உடன் கும்மாளம்... செளந்தரபாண்டியை பொறி வைத்து பிடித்த சண்முகம்
அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் சௌந்தரபாண்டி 20 நிர்வாகிகளை கடத்திச் சென்ற நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

Anna Serial
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினந்தோறும் இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் பரணியை தேர்தலில் தோற்கடிப்பதற்காக 20 நிர்வாகிகளை கடத்திச் சென்று சௌந்தரபாண்டி ஒரு ரிசார்ட்டில் தங்க வைத்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
Zee Tamil Anna serial
அதாவது சௌந்தரபாண்டி எல்லாருக்கும் சரக்கு ஊற்றி கொடுத்து குடிக்க வைத்து டான்ஸ் ஆடி உங்களை சந்தோஷப்படுத்த பாம்பேவில் இருந்து ஒரு பெண்ணை இறக்கி இருப்பதாக சொல்கிறார். மறுபக்கம் சண்முகமும், பரணியும் சனியனின் வீட்டுக்கு வந்து அவனது மனைவியிடம் சனியன் யாரோ ஒரு பொண்ணை கட்டிப்பிடித்து வெளியே சுத்திக்கிட்டு இருக்காரு என்று பொய் சொல்லி டிராமா போடுகின்றனர்.
இதையும் படியுங்கள்... பட்டு வேட்டி சட்டையில் ஜம்முனு வந்து திருப்பதியில் சாமி தரிசனம் செய்த அஜித்குமார்- விடாமுயற்சிக்காக வேண்டுதலா?
Anna Serial Update
இதைக்கேட்டு அதிர்ச்சி அடையும் அவரது மனைவி, சனியனுக்கு போன் போட்டு எங்க இருக்க என்று கேட்கிறார். சனியன், சௌந்தரபாண்டி ஐயாவோட தான் இருக்கேன் என்று இருக்கும் இடத்தை உளறி விடுகிறான். இங்கு சௌந்தரபாண்டி பாம்பேவிலிருந்து வரவைத்த பெண்ணை டான்ஸ் ஆட வைக்க, அனைவரும் குடித்து கும்மாளம் இடுவதை முத்துப்பாண்டி வீடியோவாக எடுத்து வைக்கிறான்.
Anna serial Today Episode
இந்த நேரத்தில் பரணி மற்றும் சண்முகம் கடத்தப்பட்ட 20 நிர்வாகிகளின் மனைவிகளோடு இந்த இடத்திற்கு வந்து அதிர்ச்சி கொடுக்கின்றனர். இவர்களால் சௌந்தர பாண்டியின் திட்டம் மொத்தமும் தோல்வி அடைகிறது. இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மிஸ் பண்ணாம பாருங்க.
இதையும் படியுங்கள்... கேட்ட சம்பளத்தை நீட்டிய கான் நடிகர்; அல்லு அர்ஜுனுக்கு டாட்டா காட்டிவிட்டு மீண்டும் பாலிவுட்டுக்கு பறந்த அட்லீ