- Home
- Gallery
- அண்ணா சீரியல் : பரணியை தோற்கடிக்க மட்டமான பிளான் போட்டு மாட்டிக்கொண்ட செளந்தரபாண்டி; இசக்கி கொடுத்த ட்விஸ்ட்
அண்ணா சீரியல் : பரணியை தோற்கடிக்க மட்டமான பிளான் போட்டு மாட்டிக்கொண்ட செளந்தரபாண்டி; இசக்கி கொடுத்த ட்விஸ்ட்
அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் பரணியை ஜெயிப்பதை தடுக்க செளந்தரபாண்டி முடிவெடுத்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

Anna Serial
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சௌந்தரபாண்டி பரணியை ஜெயிக்க விட கூடாது, அவ ஜெயித்தா நமக்கு ஆபத்து தான் என்று இதை தடுக்க திட்டமிட முடிவெடுத்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது, ஷண்முகம் அசந்து தூங்கி கொண்டிருக்க, தூக்கத்தில் இருந்து எழும் பரணி அவனை எழுப்பி எதுக்கு எனக்கு ஓட்டு போட மாட்டேன்னு சொல்ற என்று கேட்க, மத்தவங்களுக்கு நீ சமைச்சு எல்லாம் கொடுத்து ஒட்டு கேட்டல, அந்த மாதிரி எனக்கு எதாவது பண்ணு என்று சொல்ல, பரணி அவனுக்கு கால் கை அமுக்கி விடுகிறாள்.
Zee Tamil Anna Serial
பிறகு ஷண்முகம் ஒரு பாட்டு பாட சொல்ல, பரணி ரொமான்ஸா பாடுவா என்று நினைத்தால் முருகன் பாட்டை பாடி மொத்த குடும்பத்தையும் அலற விடுகிறாள். வைகுண்டம் உட்பட எல்லாரும் எழுந்து வந்து என்னமா ஆச்சு? யார் புலம்பிட்டு இருக்கறது என்று கேட்க, பரணி நான் பாட்டு பாடினேன் மாமா என்று சொல்கிறாள். மேலும் நான் பாட்டு பாடுனா தான் ஷண்முகம் ஓட்டு போடுவானாம் என்று சொல்ல, சண்முகத்தின் தங்கைகள் அப்போ நாங்களும் பாட்டு பாடி ஓட்டு கேட்கிறோம் என்று பாடுகின்றனர்.
இதையும் படியுங்கள்... புடிச்சாலும் புளியங்கொம்பா புடிச்சிருக்காங்க! பணக்கார வீட்டு பெண்ணை கரம்பிடித்த டாப் ஹீரோஸ் லிஸ்ட் இதோ
Anna serial Update
இதையடுத்து சௌந்தரபாண்டி புது போன், புது சிம் வாங்கி வந்து ஓட்டு போட போகும் நிர்வாகிகள் 20 பேருக்கும் தனித்தனியாக போன் செய்து பெண்ணின் குரலில் பேசி நேர்ல பாக்க வர மாட்டீங்களா என்று கேட்க, இவர்களும் எங்க வரணும் என்று கேட்க, சௌந்தரபாண்டி ஒரு இடத்தை சொல்கிறார். இதே போல் சௌந்தரபாண்டி ஷண்முகத்துக்கும் போன் செய்து பெண் குரலில் பேச, ஷண்முகம் ஒரு பொம்பள கூப்பிட்டா இந்த ஷண்முகம் வந்துடுவானா என்று திட்டி போனை வைத்து விடுகிறான். இதையடுத்து போன் வந்த 20 பேரும் ஒரு இடத்திற்கு செல்ல சௌந்தரபாண்டியும் அங்கு வந்து எனக்கும் போன் வந்தது என்று சொல்லி எல்லாரையும் ஒரு பஸ்ஸில் ஏற வைத்து அனைவரையும் கடத்தி செல்கிறார்.
Anna serial Today Episode
மறுபக்கம் காணாமல் போன 20 ஆண்களின் மனைவிமார்கள் ஷண்முகம் வீட்டிற்கு ஓடி வந்து என் புருஷனை காணோம் என்று சொல்ல, இசக்கி சௌந்தரபாண்டி தான் பொம்பள குரலில் பேசிட்டு இருந்தார் என்று சொன்னதும் சண்முகத்துக்கு 20 பேரையும் கடத்தியது சௌந்தரபாண்டி தான் என்பது தெரிய வருகிறது. அடுத்து கடத்தி வரப்பட்ட நிர்வாகிகளை ஒரு ரெசார்ட்டில் அடைத்து சரக்கு வாங்கி கொடுத்து ஆட்டம் பாட்டம் என்று சந்தோசப்படுத்துகிறார் சௌந்தரபாண்டி. இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை மிஸ் பண்ணாம பாருங்க.
இதையும் படியுங்கள்... நினைத்தாலே இனிக்கும் சீரியலில் அதிரடியாக என்ட்ரி கொடுக்கும் 5 நடிகைகள் - அப்படி என்ன ஸ்பெஷல்?