- Home
- Gallery
- அண்ணா சீரியல் : அவ ஜெயிச்சா நமக்கு ஜெயில் தான்... பரணியை தோற்கடிக்க கங்கணம் கட்டும் முத்துப்பாண்டி
அண்ணா சீரியல் : அவ ஜெயிச்சா நமக்கு ஜெயில் தான்... பரணியை தோற்கடிக்க கங்கணம் கட்டும் முத்துப்பாண்டி
அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் பரணி ஓட்டு சேகரிக்க தொடங்கிய நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

Anna serial
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் பரணி, பாக்கியம், சண்முகத்தின் தங்கைகள் என எல்லாரும் சேர்ந்து ஓட்டு சேகரிக்க தொடங்கிய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது, ஷண்முகம் சின்ன பிள்ளைகளுக்கு ஒரு கிரிக்கெட் போட்டி வைத்த தென்னை மட்டையில் கிரிக்கெட் விளையாடிட்டு இருந்த அவர்களுக்கு புது பேட் வாங்கி கொடுத்து இனிமே இதுல விளையாடுங்க என்று சொல்கிறான்.
Zee Tamil Anna serial
பிறகு உங்க அப்பா அம்மாவை யாருக்கு ஓட்டு போட சொல்வீங்க என்று கேட்க, பிள்ளைகள் உங்களுக்கு தான் என்று சொல்ல, அவர்களது பெற்றோரும் சண்முகத்துக்கு தான் ஓட்டு போடுவோம் என்று சொல்கின்றனர். இதனை தொடர்ந்து நேராக சௌந்தரபாண்டி வீட்டிற்கு வர, அவர் விஷயம் அறிந்து பாக்கியத்தை பிடித்து திட்டுகிறார். பரணி ஆமாம் எனக்கு ஒட்டு கேட்க தான் போய் இருந்தோம், உங்க கிட்டயும் ஓட்டு கேட்க தான் வந்தோம் என்று சொல்லி வெறுப்பேற்றுகிறாள்.
இதையும் படியுங்கள்... Ethirneechal : சீரியல் முடிந்தாலும்.. நட்புக்கு முடிவில்லை! எதிர்நீச்சல் சீரியல் டீமின் ரியூனியன் போட்டோஸ் இதோ
Anna serial Update
பிறகு சௌந்தரபாண்டி பரணியை ஜெயிக்க விட கூடாது, ஏதாவது செய்ய வேண்டும் என்று யோசிக்கிறார். மறுபக்கம் வீட்டிற்கு வந்த பரணி எல்லாரும் சாப்பிட்டு கொண்டிருக்கும் போது மொத்தம் 22 ஓட்டுல 20 ஓட்டு எனக்கு தான். மீது 2 ஓட்டு தான் இருக்கு. அது ஷண்முகம் கிட்டயும் சௌந்தரபாண்டி கிட்டயும் இருக்கு என்று சொல்கிறாள். ஷண்முகம் என்கிட்ட ஓட்டு கேட்டா தான் போடுவேன் என்று சொல்ல, பரணி அப்படினா உன் ஓட்டே எனக்கு தேவையில்லை என்று சொல்கிறாள்.
Anna serial Today Episode
அடுத்து சௌந்தரபாண்டி முத்துபாண்டியிடம் அந்த பரணி ஜெயிக்க கூடாது, அவ ஜெயித்தா எல்லா விஷயத்தையும் நோண்ட ஆரம்பித்துடுவா, அப்புறம் ஸ்டேஷனில் இருக்கும் நகை மொத்தமாக அப்படியே போய்டும் என்று சொல்ல, முத்துப்பாண்டி அங்க சிசிடிவி கேமரா வச்சிருக்கேன் என்று ஸ்டேஷனலில் நடப்பதை வீடியோவாக காட்டுகிறான், இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை மிஸ் பண்ணாம பாருங்க.
இதையும் படியுங்கள்... Ponni : பொன்னி சீரியலில் இருந்து திடீர் என விலகிய பிரபல நடிகை! அதிரடியாக உள்ளே வந்த சன் டிவி சீரியல் நடிகை!