- Home
- Gallery
- அண்ணா சீரியல் : சூடு பிடிக்கும் தர்மகத்தா தேர்தல் பிரச்சாரம்; செளந்தரபாண்டியை பகடைக் காயாக பயன்படுத்தும் பரணி
அண்ணா சீரியல் : சூடு பிடிக்கும் தர்மகத்தா தேர்தல் பிரச்சாரம்; செளந்தரபாண்டியை பகடைக் காயாக பயன்படுத்தும் பரணி
அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் சண்முகம் பரணியை காப்பாற்றி சௌந்தரபாண்டிக்கு சவால் விட்ட நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

Anna Serial
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சண்முகம் பரணியை காப்பாற்றி சௌந்தரபாண்டிக்கு சவால் விட்ட நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது சண்முகமும் பரணியும் கேரளாவுக்கு வந்து சண்முகத்தின் அம்மா சூடாமணியை சந்திக்கின்றனர். பரணி தேர்தலில் நிற்கும் விஷயம் அறிந்த சூடாமணி நீதான் என் மருமக என்று கட்டிப்பிடித்து ஆற தழுவுகிறாள்.
Zee Tamil Anna Serial
பிறகு சண்முகத்திடம் நீ எதுக்கு தேர்தல் நிற்க மாட்டேன் என்று சொன்னேன் என்று கோபப்படுகிறாள். மத்ததெல்லாம் மாமாவுக்காக விட்டுக்கொடுக்க சொல்லி கேட்டுச்சு அத்தை எனக்கு இன்னொரு அம்மா மாதிரி என்று சொல்ல, சூடாமணி பாக்கியத்துக்கு சௌந்தரபாண்டியன் தெரியாது என்று சொல்கிறாள். பிறகு சண்முகம் பரணியை ஜெயிக்க வச்சு அந்த சௌந்தரபாண்டி முத்துப்பாண்டி மற்றும் பாண்டியம்மாவுக்கு பாடம் புகட்டுவேன் என்று சொல்கிறான். அதைத்தொடர்ந்து வீட்டுக்கு வந்த பரணி சண்முகத்தின் தங்கைகளை கூட்டி வச்சு ஓட்டு கேட்க திட்டமிடுகிறான்.
இதையும் படியுங்கள்... எதிர்நீச்சலுக்கு எகிறிய டிஆர்பி... பின்னுக்கு தள்ளப்பட்ட சிறகடிக்க ஆசை - இந்த வார டாப் 10 சீரியல் லிஸ்ட் இதோ
Anna Serial Update
சௌந்தரபாண்டி வீட்ல அவருக்கு ஆதரவா அவங்க வீட்டு பெண்களே இல்லன்னு புரிய வைத்து ஓட்டு கேட்கணும் என்று முடிவு எடுக்கிறாள். பிறகு பாக்கியம் மற்றும் இசக்கி ஆகியோரையும் வர வைத்து சண்முகத்தின் தங்கைகளையும் கூட்டிக்கொண்டு ஒரு வீட்டுக்குச் சென்று சமையல் செய்து கொடுத்து யாருக்கு ஓட்டு போடுவீங்க என்று கேட்க உங்க அப்பாவுக்குத் தான் என்று அந்த குடும்பத்தார் சொல்ல பரணி என் அப்பாவே எனக்குத்தான் ஓட்டு போடுவாரு என்று சொல்கிறாள்.
Anna Serial Today Episode
பிறகு பாக்கியம் சௌந்தரபாண்டிக்கு போன் போட்டு உங்களுக்காக ஓட்டு கேட்க தான் வந்திருக்கேன் என்று சொல்ல, சௌந்தரபாண்டியும் அதை நம்பி என் பொண்டாட்டி சொல்ற மாதிரியே ஓட்டு போட்டு விடுங்க என்று சொல்கிறார். பிறகு இன்னொரு வீட்டுக்குச் சென்று ஓட்டு கேட்க போக அப்போது அந்த வீட்டுக்கு குழந்தைக்கு அனுப்ப முடியாமல் சென்றுவிட, பரணி ஒரு டாக்டராக குழந்தைக்கு ட்ரீட்மென்ட் கொடுத்து காப்பாற்றுகிறாள். இதனால் அந்த குடும்பத்தினர் உங்களுக்கு தான் ஓட்டு போடுவோம் என்று வாக்கு கொடுக்கின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை மிஸ் பண்ணாம பாருங்க.
இதையும் படியுங்கள்... Keerthy Suresh: எல்லோர் கண்ணும் இவங்க மேலதான்... திருமண கொண்டாட்டத்தில் பிசியான கீர்த்தி சுரேஷ் - போட்டோஸ் இதோ