- Home
- Gallery
- Anna serial : பறிபோன பதவி... அழுது புலம்பும் முத்துப்பாண்டி; தர்மகத்தா ஆகப்போவது யார்? அண்ணா சீரியல் அப்டேட்
Anna serial : பறிபோன பதவி... அழுது புலம்பும் முத்துப்பாண்டி; தர்மகத்தா ஆகப்போவது யார்? அண்ணா சீரியல் அப்டேட்
அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் பரணி சண்முகத்தை வெளியே கொண்டு வந்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

Anna Serial
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் பரணி சண்முகத்தை வெளியே கொண்டு வந்து முத்துபாண்டியை சஸ்பெண்ட் செய்ய வைத்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது, முத்துப்பாண்டி சஸ்பெண்ட் ஆகி யூனிபார்மை கழட்டி விட்டு வெளியேற பரணியும் சண்முகமும் ஜெயித்ததை நினைத்து சந்தோசப்படுகின்றனர்.
Zee Tamil Anna Serial
ஷண்முகம் வீட்டில் எல்லாரும் ஷண்முகத்திற்காக காத்திருக்க, பரணி ஆட்டோவில் வந்து இறங்க சண்முகத்தை ஆரத்தி எடுத்து வீட்டிற்குள் அழைத்து செல்கின்றனர். இதையடுத்து பரணி நான் சொன்ன மாதிரி ரெண்டு விஷயத்தையும் செய்து விட்டதாக சொல்கிறாள். மறுபக்கம் வீட்டிற்கு வந்த முத்துப்பாண்டி என் பவர் எல்லாம் போச்சு என்று அழுது புலம்பி கொண்டிருக்க, பாக்கியமும் சிவபாலனும் இவனுக்கு இதெல்லாம் தேவை தான் என்று நக்கல் அடிக்க, இசக்கி அவனை பார்த்து வருத்தப்படுகிறாள். இசக்கி அவனை நெருங்க முயற்சிக்க, பாக்கியம் நீ வா என்று அழைத்து சென்று விடுகிறாள்.
இதையும் படியுங்கள்... Chaitra Reddy : கணவருடன் சேர்ந்து குட் நியூஸ் சொன்ன கயல் சீரியல் நாயகி சைத்ரா ரெட்டி - குவியும் வாழ்த்து
Anna Serial Update
அதன் பிறகு சௌந்தரபாண்டி என்ன இருந்தாலும் தர்மகத்தா பதவியை விட்டுட கூடாது என்று சௌந்தரபாண்டி சொல்ல, முத்துப்பாண்டி என்னால எதுவும் பண்ண முடியாது என்று கோபப்படுகிறான். பாண்டியம்மா அவன் அப்படி சொன்னாலும் நாம அமைதியாக இருக்க கூடாது. அந்த ஷண்முகம் ஜெயிச்சா நம்ம ரெண்டு பேருக்கு தான் பிரச்சனை என்று சொல்கிறாள்.
Anna Serial Today Episode
இதையடுத்து பஞ்சாயத்துக்கு வரும் சௌந்தரபாண்டி தர்மக்கத்தா தேர்தலில் நான் நின்னா என்ன? என் மாப்பிள்ளை நின்னா என்ன? ரெண்டு பேரும் ஒரே குடும்பம் தானே.. ஒரு கடையை வச்சிட்டு பார்த்திருந்த என் மாப்பிளையை பிரசிடெண்ட் ஆக்கிடீங்க, இப்போ தர்மகத்தாவும் ஆகிட்டா அவரால் எல்லா பொறுப்பையும் எப்படி பார்க்க முடியும். அதனால் நானே தர்மகத்தாவாக இருக்கேன் என்று டிராமா போடுகிறார்.
இதை கேட்ட ஷண்முகம் உங்களுக்கு வயசாகிடுச்சு மாமா.. அதனால் நீங்க ஒய்வு எடுங்க.. எல்லாத்தையும் நான் பார்த்துகிறேன் என்று பதிலடி கொடுக்கிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை மிஸ் பண்ணாம பாருங்க.
இதையும் படியுங்கள்... SK 23 : சிவகார்த்திகேயனை அடிக்க கேஜிஎஃப்-ல் இருந்து ஆள் இறக்கிய முருகதாஸ்... எஸ்.கே.23 படத்தின் வில்லன் இவரா?