- Home
- Gallery
- அண்ணா சீரியல் : ஷண்முகத்தை என்கவுண்டரில் போட்டு தள்ளபோகும் முத்துப்பாண்டி... காப்பாற்றுவாளா பரணி?
அண்ணா சீரியல் : ஷண்முகத்தை என்கவுண்டரில் போட்டு தள்ளபோகும் முத்துப்பாண்டி... காப்பாற்றுவாளா பரணி?
அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் பரணி குடிநீர் விடும் கிணற்றின் அருகே இருக்கும் சிசிடிவி கேமராவை பார்த்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

Anna Serial
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைகாட்ச்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் பரணி குடிநீர் விடும் கிணற்றின் அருகே இருக்கும் சிசிடிவி கேமராவை பார்த்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது, ஷண்முகம் வீட்டில் தங்கைகள் எல்லாரும் அண்ணி அண்ணனோட தான் வருவாங்க என்று பேசி கொண்டிருக்க, ஆட்டோ சத்தம் கேட்டு அண்ணன் வந்துடுச்சி என்று வெளியில் ஓடி வர, பரணி மட்டும் தனியாக இறங்குவதை பார்த்து ஷாக்காகின்றனர்.
Zee Tamil Anna Serial
இதனை தொடர்ந்து பரணியிடம் அண்ணன் எங்கே என்று கேட்க, கூடிய சீக்கிரம் அவன் வெளியே வந்துடுவான் என்று அவர்களை சமாதானம் செய்து சாப்பிட வைக்கிறாள் பரணி, பிறகு சிவபாலனை வைத்து தண்ணீர் விடும் கோவிந்தனை கூப்பிட்டு வர சொல்லி நீ ஏன் தண்ணீர் விடல? எங்க போய் இருந்த என்று விசாரிக்க, சனியன் தான் எனக்கு சரக்கு ஊத்தி கொடுத்து மட்டையாக்கி விட்டதாக சொல்கிறான்.
இதையும் படியுங்கள்... சிவகார்த்திகேயன் படித்த கல்லூரியில் டி இமானின் இசை நிகழ்ச்சி... கடைசி நேரத்தில் ரத்து - காரணம் என்ன?
Anna Serial Update
அதே போல் ஷண்முகம் போனில் இருந்து தண்ணீர் வரலன்னு கம்பளைண்ட் வந்த நம்பருக்கு போன் செய்து சனியன் மனைவி எடுத்து பேசவே இது எல்லாம் சௌந்தரபாண்டியின் ஏற்பாடு என்பதை புரிந்து கொள்கிறாள் பரணி. அடுத்து முத்துப்பாண்டி அப்பாவுக்கு போனை போட்டு சண்முகத்தை கைது செய்த விஷயத்தை சொல்ல, அவர் அவனை வெளியே கூட்டிட்டு போய் தப்பித்து போக முயற்சி செய்ததாக என்கவுண்டர்ல போட்டு தள்ளிடு என்று சொல்ல, இதை முப்பிடாதி கேட்டு விடுகிறான்.
Anna Serial Today Episode
ஷண்முகத்திடம் விஷயத்தை சொல்லி தப்பி போக சொல்ல, அவன் அதெல்லாம் அவனால் ஒன்னும் பண்ண முடியாது, நீ பரணிக்கு இந்த விஷயத்தை சொல்லு என்று சொன்னதும் முப்பிடாதி பரணிக்கு தகவல் கொடுக்கிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மிஸ் பண்ணாம பாருங்க.
இதையும் படியுங்கள்... 15 வயதில் வீட்டை விட்டு ஓடி வந்த பெண்; இன்று சினிமாவில் லேடி சூப்பர்ஸ்டார்! ஆனா நயன்தாரா இல்ல- யார் அந்த நடிகை