- Home
- Gallery
- சூடாமணியை அம்மான்னு கூப்பிட்டு ஷாக் கொடுத்த இசக்கி..! சௌந்தரபாண்டிக்கு கிடைத்த பல்பு - அண்ணா சீரியல் அப்டேட்!
சூடாமணியை அம்மான்னு கூப்பிட்டு ஷாக் கொடுத்த இசக்கி..! சௌந்தரபாண்டிக்கு கிடைத்த பல்பு - அண்ணா சீரியல் அப்டேட்!
அண்ணன் தங்கைகளின் பாசத்தின் இலக்கணமாக ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும், 'அண்ணா' சீரியலில் சண்முகத்தின் குடும்பமும் சௌந்தரபாண்டி குடும்பமும் கோவிலுக்கு செல்லும் நிலையில் இன்று என்ன நடக்க போகிறது என்பதை பார்ப்போம்.

சௌந்தரபாண்டியும், சனியனும் கோவிலுக்கு வர யாரும் அவர்களை கண்டு கொள்ளாததால் அசிங்கப்பட்டு போகின்றனர். ஆனால் நிர்வாகிகள் எல்லோருமே புதிதாக பொறுப்பேற்றுள்ள பரணியை வரவேற்க கார்த்திருப்பதால், தனக்கு கிடைத்த பல்பை வெளியே காட்டி கொள்ளாமல் அங்கிருந்து செல்கிறார் சௌந்திரபாண்டி.
பின்னர் இசக்கி, கணவர் முத்துபாண்டியை அழைத்து வந்து.. ஷண்முகத்தின் முன் நிறுத்தி, அண்ணா இப்போலாம் அவர் முன்ன மாதிரி இல்ல. ரொம்ப மாறி விட்டார் என சந்தோஷமாக சொல்கிறாள். இசக்கியின் சந்தோஷம் ஷண்முகத்திற்கு மன நிம்மதியை கொடுத்தாலும், முத்து பாண்டியை சந்தேக பார்வையுடன் பார்க்கிறார்.
பின்னர் சூடாமணி, மகள் இசக்கியை பார்த்து பூரித்து போக... இசக்கி திடீர் என சூடாமணியை பார்த்து அம்மா என்று அழைக்கிறார். இதனால் அனைவரும் ஒரு நிமிடம் அதிர்ச்சியில் உறைய, அம்மாவை தான் அம்மானு கூப்பிட முடியாமல் போய்விட்டது, அம்மாவின் தோழியான உங்களையாவது அம்மானு கூப்பிடலாம் தான் இப்படி கூப்பிட்டேன் எனேவ இசக்கி கூற அதை கேட்டு சூடாமணி நீ அப்படியே கூப்பிடு என்று சொல்லி, சந்தோசப்படுகிறாள்.
கோவிலில் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த சௌந்தரபாண்டி, திடீர் என ஒரு பெண்ணை பார்த்து, இது என்ன சூடாமணி போலவே இருக்கு என, ஒரு பெண்ணை பின்தொடர்ந்து சென்று அந்த பெண்ணின் கையை பிடித்து இழுக்க, அந்த பெண் நீ பார்க்க பெரிய மனுஷனா இருக்க, இப்படி அசிங்கமே பொம்பளை கையை பிடிச்சு இழுக்குற என்று திட்டி தீர்க்கிறார்.
பின்னர் இசக்கி விளக்கு போட வேண்டும் என்று சொல்ல, சூடாமணி மகளுக்கு எல்லா ஏற்பாடுகளையும் செய்து தருகிறாள். அடுத்து இசக்கி விளக்கு ஏற்றியதும் அது அணைய போக சூடாமணி ஓடி வந்து விளக்கை அணையாமல் பார்த்து கொள்கிறார். மற்ற பிள்ளைகள் சூடாமணி மீது கோவத்தை காட்டினாலும், இசக்கியின் அன்பு சூடாமணிக்கு ஆறுதலாக அமைகிறது. இசக்கிக்கு பூ முடி எடுக்க ஏற்பாடு ஒருபுறம் நடக்கும் நிலையில், சூடாமணியை சௌந்தரபாண்டி பார்ப்பாரா? ஒருவேளை பார்த்தால் என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.