- Home
- Gallery
- Anna Serial: சூடாமணியால் ரத்னா - ஷண்முகம் இடையே வந்த பிரச்சனை! நடந்தது என்ன? அண்ணா சீரியல் அப்டேட்!
Anna Serial: சூடாமணியால் ரத்னா - ஷண்முகம் இடையே வந்த பிரச்சனை! நடந்தது என்ன? அண்ணா சீரியல் அப்டேட்!
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அண்ணா சீரியலில், சூடாமணி தன்னுடைய மகள் இசக்கியை பார்க்க ஆசைப்பட்ட நிலையில், இன்று நடக்க போவது என்ன என்பது பற்றி பார்க்கலாம்.

ஷண்முகத்திற்கு, அப்பா வைகுண்டம் சௌந்தரபாண்டி வீட்டுக்கு சென்ற விஷயம் தெரியவர, இதனால் கோவப்பட்டு "எதுக்கு பா இப்படி பண்ண' என்று கேட்கிறான். இதற்க்குவைகுண்டம், உங்கம்மா சூடாமணி தான் இசக்கியை பார்க்கணும்னு ஆசைப்பட்டா, அவளை வீட்டிற்கு கூப்பிட முடியாது, அதனால் தான் கோவிலுக்கு வர சொன்னதாக சொல்ல, இதை அரைகுறையாக கேட்டுவிட்டு ரத்னா கோவப்படுகிறார்.
யார் நீங்க? நீங்க எதுக்கு இசக்கியை பார்க்கணும்னு சொல்றீங்க என சூடாமணியை நிற்க வைத்து கேள்வி மேல் கேள்வி கேட்க, ஷண்முகம் உண்மையை சொல்ல முடியாமல் தர்மசங்கடத்திற்கு ஆளாகிறார். ஷண்முகம் ரத்னாவை அமைதி படுத்த முயலும் நிலையில் அவள், ஷண்முகம் பேச்சை கேட்காமல் சூடாமணியிடம் கோபப்பட, ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து ஷண்முகம் அவளை அடிக்க கை ஓங்குகிறான்.
இது ரத்னாவை மேலும் கோபமடைய வைக்கிறது. இதுவரைக்கும் எங்க அண்ணன், எங்களை அடிச்சதே கிடையாது, ஆனால் இப்போ என் அண்ணனே என்னை அடிக்க கை ஓங்கிருச்சி.. இதுக்கு நீங்க தான் காரணம் என சூடாமணி மீதி குற்றம் சுமத்தும் ரத்னா, நீங்க வந்த ரெண்டாவது நாளே இப்படி ஆகிருச்சு என்று கொந்தளிக்கிறார். ஆனால் சூடாமணி தன்னுடைய தாய் பாசத்தை வெளிப்படுத்தி ரத்னா பாவம் பா, புள்ளைங்க யாரும் சாப்பிடல.. நான் கூட இந்த வீட்டை விட்டு போயிடுறேன் என்று சொல்ல, ஷண்முகம் அவங்க உங்களை பத்தி தெரியாமல் பேசுறாங்க என்று ஆறுதல் சொல்கிறான்.
பின்னர் தன்னுடைய தங்கைகளை சமாதானப்படுத்தி அவர்களை சாப்பிட வைக்கிறான் ஷண்முகம். இதை பார்த்து பூரித்து போன சூடாமணி நீ ஒரு அண்ணன் மட்டுமில்ல, ஒரு அம்மாவாகவும் இருக்க என்று சந்தோசப்படுகிறாள். இதை தொடந்து இசைக்கி, மாமியாருடன் கோவிலுக்கு கிளம்ப... நாங்களும் கோவிலுக்கு வரோம் என்று சௌந்தரபாண்டி மற்றும் முத்துப்பாண்டி சொல்ல இந்த விஷயம் சண்முகத்துக்கு தெரிய வர, அவன் ஷாக் ஆகிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
SIIMA 2024: சைமா 2024 விருதுக்கான பரிந்துரையில் 'ஜெயிலர்' திரைப்படம் 11 பிரிவுகளில் இடம்பெற்றுள்ளது!