- Home
- Gallery
- அண்ணா சீரியல் : கோர்ட்டில் அந்தர் பல்டி அடித்த செளந்தரபாண்டி... பாண்டியம்மாவுக்கு வழங்கப்பட்ட தண்டனை என்ன?
அண்ணா சீரியல் : கோர்ட்டில் அந்தர் பல்டி அடித்த செளந்தரபாண்டி... பாண்டியம்மாவுக்கு வழங்கப்பட்ட தண்டனை என்ன?
அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் போலீஸ் சௌந்தரபாண்டி வீட்டில் சோதனையிட்ட நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

Anna Serial
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் போலீஸ் சௌந்தரபாண்டி வீட்டில் சோதனையிட பாண்டியம்மா ரூமில் நகை பெட்டி கிடைத்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது, பாண்டியம்மாவை போலீஸ் கைது செய்ய போகும் போது அவர் சௌந்தரபாண்டியை பார்த்து கடைசியில் என்னை மாட்டி விட்டுட்டியே டா என்று திட்டி விட்டு செல்கிறாள்.
Zee Tamil Anna serial
மறுபக்கம் பரணியும் சண்முகமும் சௌந்தரபாண்டி தப்பிச்சிடாரே என்று வருத்தப்படுகின்றனர். அதனை தொடர்ந்து பாண்டியம்மாவை கோர்ட்டில் ஆஜர் படுத்த முடிவெடுத்த நிலையில் பரணியும், ஷண்முகமும் பாண்டியம்மாவை சந்தித்து நீங்க உண்மையை சொல்லலேனா உங்களுக்கு தான் பெருசா தண்டனை கிடைக்கும், உங்க தம்பி தப்பிச்சிடுவாரு என்று சொல்ல, பாண்டியம்மா உண்மையை சொல்ல முடிவெடுக்கிறாள்.
இதையும் படியுங்கள்... ஒன்னில்ல; ரெண்டில்ல.. ஒரே நேரத்தில் 3 ஓடிடி தளங்களில் வெளியாகும் சூரியின் கருடன் திரைப்படம் - எப்போ ரிலீஸ்?
Anna serial Update
அடுத்ததாக பாண்டியம்மாவை கோர்ட்டில் ஆஜர் படுத்த அவள் உண்மையை சொல்ல தயாராக, சௌந்தரபாண்டி கோவில் நகைகளை பாண்டியம்மாவிடம் கொடுத்து போட்டு பார்க்க சொல்லி எடுத்த போட்டோவை காட்டி என் அக்கா தான் நகையை திருடி இருக்கா என்று கோர்த்து விடுகிறார்.
Anna serial Today Episode
இதனால் நீதிமன்றம் பாண்டியம்மாவுக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனையை விதிக்கிறது. இதனால் செளந்தரபாண்டியும், பாண்டியம்மாவுக்கு ஷாக் ஆகின்றனர். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மிஸ் பண்ணாம பாருங்க.
இதையும் படியுங்கள்... Video: ரெளடி பேபியாக மாறிய ராதிகா... வரலட்சுமியின் திருமண விழாவில் மனைவியுடன் சரத்குமார் ஆடிய வேறலெவல் டான்ஸ்