- Home
- Gallery
- இனிமே ஒட்டும் இல்ல... உறவும் இல்ல; இசக்கியை தலைமுழுகிய ஷண்முகம் - அண்ணா சீரியலில் திடீர் திருப்பம்
இனிமே ஒட்டும் இல்ல... உறவும் இல்ல; இசக்கியை தலைமுழுகிய ஷண்முகம் - அண்ணா சீரியலில் திடீர் திருப்பம்
அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் பஞ்சாயத்தில் வைத்து இசக்கி முத்துபாண்டியிடம் வாழ்வதாக அதிர்ச்சி கொடுத்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

Anna Serial
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் பஞ்சாயத்தில் வைத்து இசக்கி முத்துபாண்டியிடம் வாழ்வதாக அதிர்ச்சி கொடுத்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது, பஞ்சாயத்துக்கு நடக்கும் நேரத்தில் ஜெயிலில் இருக்கும் சூடாமணிக்கு உடல்நிலை சரியில்லாமல் சென்று சாக போய் கடைசியாக கண் விழிக்கிறாள்.
Zee Tamil Anna Serial
அடுத்து வீட்டிற்கு வந்த ஷண்முகம் இனிமே இந்த வீட்டில் யாரும் இசக்கியை பற்றி பேச கூடாது. அவளுக்கும் இந்த குடும்பத்திற்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று சொல்கிறான். இந்த நேரம் பார்த்து இசக்கியும் பாக்கியமும் ஆட்டோவில் வந்து இறங்க உள்ளே வர விடாமல் தடுத்து நிறுத்தும் ஷண்முகம் இசக்கியின் துணிகளை தூக்கி வெளியே போட்டு கொளுத்துகிறான்.
இதையும் படியுங்கள்... காதல் கணவருடன் தாஜ்மஹாலில் காதலர் தினத்தை கொண்டாடிய சீரியல் நடிகை ரித்திகா - வைரலாகும் போட்டோஸ்
Anna Serial Update
இனிமே ஓட்டும் இல்ல உறவும் இல்ல என்று சொல்ல இசக்கி கண்ணீருடன் வெளியேறுகிறாள். அடுத்து பாக்கியம் அவளை ஆரத்தி எடுத்து வீட்டிற்குள் அழைத்து செல்ல ரூமுக்குள் சென்ற இசக்கி ரத்தனாவோட வாழ்க்கைக்காகவும் நீ கொலைகாரனாக ஆகிட கூடாது என்பதற்காகவும் தான் இப்படியொரு முடிவை எடுத்தேன், இதை நான் பிடித்து எடுக்கல என்று கலங்கி அழ சிவபாலன் இதை கேட்டு விடுகிறான்.
Anna serial Today Episode
உடனே அவன் ரூமுக்குள் வர இசக்கி அழுகையை அடக்கி கொண்டு எதுவும் காட்டி கொள்ளாமல் இருக்க சிவபாலனும் எதையும் கேட்காதது போல் இருக்கிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மிஸ் பண்ணாம பாருங்க.
இதையும் படியுங்கள்... வீட்டில் பிணமாக கண்டெடுக்கப்பட்ட பிரபல இயக்குனர் - அதிர்ச்சியில் திரையுலகம்