- Home
- Gallery
- Anitha : தம்பி அருண் விஜயோடு இறால் ஷாப்பிங் - பீச்சில் சொந்தங்களோடு செம வைப் செய்த அனிதா விஜயகுமார்!
Anitha : தம்பி அருண் விஜயோடு இறால் ஷாப்பிங் - பீச்சில் சொந்தங்களோடு செம வைப் செய்த அனிதா விஜயகுமார்!
Arun Vijay : மகளின் திருமணத்தை சிறப்பாக நடத்தி முடிந்துள்ள அனிதா விஜயகுமார், தனது தம்பி நடிகர் அருண் விஜயோடு இணைந்து ஷாப்பிங் சென்றுள்ளார்.

veteran actor vijayakumar
பிரபல நடிகர் அருண் விஜய் அவர்களுடைய மூத்த சகோதரி, மருத்துவர் அனிதா விஜயகுமார் கடந்த பிப்ரவரி மாதம் தனது மகள் தியாவிற்கு வெகு விமர்சையாக திருமணம் நடத்தி வைத்தார்.
Anitha vijayakumar Chennai
வெளிநாட்டில் வசிக்கும் அனிதா விஜயகுமார், நடிகர் விஜயகுமாரின் மூத்த மகள் என்பது குறிப்பிடத்தக்கது. வெளிநாட்டில் தனது கணவரோடு வசித்து வரும் அவர் ஒரு மருத்துவர் ஆவார். இவருடைய வீட்டிலேயே இவர் ஒருவர் தான் திரைத்துறையில் பயணிக்காத நபர்.
Arun Vijay Chennai
தனது மகளின் திருமணத்தை வெகு விமர்சையாக நடத்தி முடித்துள்ள அனிதா விஜயகுமார், தற்பொழுது சென்னையில் தனது குடும்பத்தோடு நேரத்தை செலவிட வந்திருக்கிறார். இந்நிலையில் தனது தம்பி அருண் விஜயோடு கடற்கரைக்குச் சென்று இறால் வாங்கியதை தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டுள்ளார்.
Anitha Chennai
மேலும் தனது தம்பி, தங்கைகளோடு கடற்கரையில் அமர்ந்து பொழுதை கழித்துள்ள அனிதா விஜயகுமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.