- Home
- Gallery
- கணவர் முதல் மருமகன் வரை எல்லாருமே மருத்துவர்கள்! நெகிழ்ச்சியோடு டாக்டர்கள் தின வாழ்த்து சொன்ன அனிதா விஜயகுமார்
கணவர் முதல் மருமகன் வரை எல்லாருமே மருத்துவர்கள்! நெகிழ்ச்சியோடு டாக்டர்கள் தின வாழ்த்து சொன்ன அனிதா விஜயகுமார்
நடிகர் விஜயகுமாரின் மகளான அனிதா தன்னுடைய குடும்பத்தில் உள்ள மருத்துவர்களின் புகைப்படங்களை பகிர்ந்து டாக்டர்கள் தின வாழ்த்து கூறி இருக்கிறார்.

Vijayakumar daughter Anitha
நடிகர் விஜயகுமாரின் பேமிலியில் சினிமா வாடையே இல்லாமல் வளர்ந்தவர் என்றால் அது அனிதா விஜயகுமார் தான். இவருக்கும் சினிமாவில் நடிக்க சான்ஸ் வந்தது. அதுவும் லெஜன்ட்ரி இயக்குனரான பாரதிராஜாவே வீடு தேடிச் சென்று அவரை தன்னுடைய படத்தில் நடிக்க அழைத்தார். ஆனால் அந்த சமயத்தில் அனிதாவின் தாயார் அதற்கு சம்மதிக்காததால் அந்த வாய்ப்பை நிராகரித்துவிட்டார் அனிதா.
Arun Vijay Sister Anitha Vijayakumar
அது என்ன படம் தெரியுமா, கருத்தம்மா. அப்படத்தில் மகேஸ்வரி நடித்த டாக்டர் கதாபாத்திரத்தில் தான் அனிதாவை நடிக்க அணுகினார் பாரதிராஜா. அவர் நடிக்க மறுத்ததால் அந்த வாய்ப்பு மகேஸ்வரிக்கு சென்றது. அந்த சமயத்தில் அம்மா எடுத்த முடிவால் தான் இன்று மருத்துவராகி இருக்கிறேன் என்று அனிதா பேட்டி ஒன்றில் நெகிழ்ச்சி உடன் கூறி இருக்கிறார்.
இதையும் படியுங்கள்... குடும்பத்தில் புதுவரவு.. செம குஷியோடு குட் நியூஸ் சொன்ன பிக்பாஸ் டைட்டில் வின்னர் அர்ச்சனா - குவியும் வாழ்த்து
Anitha vijayakumar family
அனிதா தன்னுடன் கல்லூரியில் படித்த கோகுலையே திருமணம் செய்துக்கொண்டார். இவர்கள் இருவருமே மருத்துவர்கள். இவர்களை போல் இவர்களது மகன் தியா மற்றும் மகன் ஶ்ரீஜெய் ஆகியோரும் எம்.பி. பி.எஸ் படித்து தற்போது டாக்டராக பணியாற்றி வருகின்றனர். தியாவுக்கு அண்மையில் திருமணம் ஆனது, அவரது கணவரும் ஒரு மருத்துவர் தான். இதன்மூலம் தன்னுடைய குடும்பத்தினர் அனைவரும் மருத்துவர்களாக இருப்பதை குறிப்பிட்டு அவர்களுக்கு டாக்டர்கள் தின வாழ்த்து தெரிித்துள்ளார் அனிதா.
Anitha Vijayakumar doctors day wish
எங்கள் குடும்பத்தில் ஒவ்வொருவரும் சேவை செய்து வருகிறோம். இது எனது தொழில் அல்ல சிறுவயதில் இருந்தே எனது கனவாக இருந்தது. அது நனவானதில் மகிழ்ச்சி. அதன்மூலம் நிறைய பேரை காப்பாற்றி இருக்கிறேன். என்னுடைய அடுத்த தலைமுறையும் அதை செய்துவருகிறது. இந்த உலகில் உள்ள அனைத்து மருத்துவர்களுக்கும் டாக்டர்கள் தின வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்... காதல் மனைவி ஹனி மூன்! கற்று கூட நுழைய முடியாத நெருக்கம்... களைகட்டும் பிரேம்ஜி-யின் குடும்ப வாழ்க்கை! போட்டோஸ்