- Home
- Gallery
- தியா - திலான் திருமண வரவேற்ப்பில்.. சைடிஷுடன் சரக்கையும் ரிட்டர்ன் கிஃப்டாக கொடுத்து அசத்திய குடும்பத்தினர்!
தியா - திலான் திருமண வரவேற்ப்பில்.. சைடிஷுடன் சரக்கையும் ரிட்டர்ன் கிஃப்டாக கொடுத்து அசத்திய குடும்பத்தினர்!
அனிதா விஜயகுமாரின் மகள் தியாவின் திருமண வரவேற்பில் ரிட்டர்ன் கிஃப்டாக என்ன கொடுக்கப்பட்டது என்பது குறித்த தகவலை தியாவே வெளியிட்டுள்ளார்.

Diya and Dilan Return Gift
தமிழ் சினிமாவில், மூன்று தலைமுறை நடிகர்களுடன் நடித்த பெருமைக்குரிய பழம்பெரும் நடிகர் விஜயகுமார். இவரின் இரண்டாவது மகளான, மருத்துவர் அனிதா விஜயகுமாரின் மகள் தியாவுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அவரின் காதலர் திலானுடன் திருமணம் நடந்தது.
Diya and Dilan Return Gift
திலான் பூர்வேகம் தமிழகம் என்றாலும், அவர் பிறந்து வளர்ந்தது எல்லாம் லண்டனில் தான். தியாவும் - திலானும் ஒரே கல்லூரியில் படித்த நிலையில், இருவரும் பல வருடங்களாக காதலித்து வந்தனர்.
Diya and Dilan Return Gift
இவரின் தந்தை ஒரு பிஸ்னஸ் மேன். வசதி வாய்ப்பிலும்... விஜயகுமார் குடும்பத்திற்கு திலான் குடும்பம் சளைத்தவர்கள் இல்லை என்பதால், விஜயகுமார் குடும்பத்தினர் தியா காதலுக்கு கிரீன் சிக்னல் காட்டியதோடு மட்டும் இன்றி, தமிழ் நாட்டிலே மிக பிரமாண்டமாக திருமணத்தை நடத்த முடிவு செய்தனர்.
Diya and Dilan Return Gift
அதன்படி தியா - திலான் திருமணம் கடந்த பிப்ரவரி மாதம் 19ம் தேதி சென்னை மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் நடந்தது. இதில் குடும்பத்தினர் மற்றும் திரையுலகை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டு இந்த ஜோடிகளை வாழ்த்தினர்.
Diya and Dilan Return Gift
தமிழ்நாட்டில் வழக்கப்படி அனிதா விஜயகுமார் மகளுக்கு ஒருமுறை திருமணம் நடந்த நிலையில், திலான் குடும்ப வழக்கப்படியும் திருமணம் நடந்தது. அதே போல் 4 முறை இவர்களுக்கு திருமண ரிசப்ஷன் நடந்துள்ளது.
Diya and Dilan Return Gift
அதாவது சமீபத்தில், திலான் குடும்பத்தினர்... லண்டனில் உள்ள உறவினர்கள் மற்றும் நண்பகர்களுக்காக என்றே ரிசப்ஷன் நடத்திய நிலையில், இதில் விஜயகுமார், அவரின் மனைவி முத்துகன்னு, அருண் விஜய், அவர் மனைவி ஆர்த்தி, பிள்ளைகள், அனிதாவின் தோழி, கவிதா விஜயகுமார் மற்றும் அவரின் குடும்பத்தினர் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதுகுறித்த புகைப்படங்களும் வெளியாகி வைரலானது.
Diya and Dilan Return Gift
இந்த ரிசப்ஷனுக்கு வந்தவர்களுக்கு என்ன ரிட்டர்ன் கிஃப்ட் கொடுக்க பட்டது என்று... தற்போது தியா தெரிவித்துள்ளார். இதுகுறித்த போட்டோஸ் வைரலாகி வருகிறது.
Diya and Dilan Return Gift
லாக்மோ கிராப்ட் நிறுவனம் மூலம் தயாரிக்கப்பட்ட பேக்கில், தியா மற்றும் திலானில் முதல் எழுதும்... ஒரு பூ கொத்தும் பிரிண்ட் செய்யப்பட்டுள்ளது. அதே போல் இவர்களுடைய பெயர் பதித்த ஸ்ட்ரிப் ஒன்றும் இதில் மாட்டப்பட்டுள்ளது.
Diya and Dilan Return Gift
அதே போல், பாப் கார்ன் பாக்கெட், பிஸ்கெட், கேண்டில் ஹோல்டர், பாப்ஸ் முட்டைகளில்.. தியாவின் ரிசப்ஷன் தேதி அச்சிடப்பட்டுள்ளது. மேலும் அந்த ரிட்டர்ன் கிப்ட் பையில் இரண்டு ஷார்ட் கிளாஸ் மற்றும் இரண்டு சரக்கு பாட்டில்கள் உள்ளன.
Diya and Dilan Return Gift
அதே போல் ஒரு வெட் டிஷு மற்றும் Dry டிஷு பாக்கெட்டுகள் உள்ளது. மொத்தம் இந்த 8 பொருள்களுடன் கூடிய பைகள் தான் திலான் குடும்பத்தினர் சார்பில் கொடுக்கப்பட்டுள்ளது. சரக்கெல்லாம் கொடுத்துருக்கீங்களா அதுவும் சைடிஷுடன் என ரசிகர்கள் ஆச்சர்யமாக கேள்வி எழுப்பி வருகிறார்கள்.