அம்பானி வீட்டு வளர்ப்பு நாயிடம் இருக்கும் ஆடம்பர சொகுசு கார்.. அதன் விலை இத்தனை கோடியா?
அம்பானி குடும்பத்தினரிடம் மட்டும் சொகுசு கார்கள் இல்லை. அம்பானி வீட்டின் செல்லப் பிராணியான ஹேப்பி என்று அழைக்கப்படும் கோல்டன் ரெட்ரீவர் நாயிடமும் ஆடம்பர சொகுசு கார் உள்ளது.

ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட்டின் ஆடம்பர திருமணம் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே இணையத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்த திருமணம் கொண்டாட்டங்களில் இந்தியா மட்டுமின்றி சர்வதேச அளவிலும் பல பிரபலங்கள், தொழிலதிபர்கள் கலந்து கொண்டனர். இந்த திருமணம் தொடர்பான பல்வேறு வீடியோக்களும் புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
குறிப்பாக அம்பானி வீட்டு திருமணத்தின் ஒரு தனித்துவமான அம்சம் சொகுசு கார்களின் அசத்தலான அணிவகுப்பு பேசு பொருளாக மாறியது.. அலங்கரிக்கப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் காரில் அம்பானி குடும்பம் பிரமாண்டமாக நுழைந்தது.
ஆனால் அம்பானி குடும்பத்தினரிடம் மட்டும் சொகுசு கார்கள் இல்லை. அம்பானி வீட்டின் செல்லப் பிராணியான ஹேப்பி என்று அழைக்கப்படும் கோல்டன் ரெட்ரீவர் நாயிடமும் ஆடம்பர சொகுசு கார் உள்ளது. ஆம். உண்மை தான். அந்த நாய் Mercedes-Benz G400d சொகுசு காரில் ஸ்டைலாக பயணிக்கிறது.
இந்த சொகுசு காரில் ஹேப்பி நாய் பயணிக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன. இந்தியாவில் காரின் விலை ரூ.2.55 முதல் 3 கோடி வரை விற்பனை செய்யப்படுகிறது..
இந்த ஆடம்பர கார், ஆனந்த் அம்பானியின் கோல்டன் ரெட்ரீவர் நாய்க்காகவே பிக்காக வாங்கப்பட்டது. அதன்படி அந்த இந்த ஆடம்பரமான வாகனத்தில் மகிழ்ச்சியுடன் பயணம் செய்வதை ஆன்லைன் வீடியோக்கள் காட்டுகின்றன.
மெர்சிடிஸின் G400d க்கு மேம்படுத்துவதற்கு முன், ஹேப்பி டொயோட்டா ஃபார்ச்சூனர் மற்றும் டொயோட்டா வெல்ஃபயர் ஆகியவற்றில் பயணம் செய்தது, இரண்டுமே விலை உயர்ந்த வாகனங்களாகும்.. டொயோட்டா ஃபார்ச்சூனரின் விலை சுமார் ரூ. 50 லட்சம், வெல்ஃபயர் விலை தோராயமாக ரூ.1.5 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.