- Home
- Gallery
- தேவதை மாதிரி இருக்கங்களே.. ஊரு கண்ணே இவங்க மேல தான்.. புதுப்பொண்ணு ராதிகா மெர்ச்சண்டின் க்யூட் போட்டோஸ்..
தேவதை மாதிரி இருக்கங்களே.. ஊரு கண்ணே இவங்க மேல தான்.. புதுப்பொண்ணு ராதிகா மெர்ச்சண்டின் க்யூட் போட்டோஸ்..
ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சண்ட் திருமணம் கோலாகலமாக நடந்து முடிந்துள்ள நிலையில் ராதிகாவின் புதிய போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன..

Radhika Merchant Latest Pics
ஆனந்த் அம்பானிக்கும் ராதிகா மெர்ச்சண்டுக்கும் இப்போது திருமணம் முடிந்துவிட்டது. பல்வேறு ப்ரீ வெட்டிங் விழாக்களுக்கு பிறகு , மும்பையில் அம்பானி வீட்டு திருமணம் கோலாகலமாக நடந்தது.
Radhika Merchant
தென்னிந்திய திரையுலகினர், பாலிவுட் திரையுலகினர், விளையாட்டு பிரபலங்கள், தொழிலதிபர்கள் மற்றும் சர்வதேச விவிஐபிக்கள் உள்ளிட்டோர் இந்த திருமண விழாவில் கலந்து கொண்டனர்.
Radhika Merchant
குறிப்பாக இந்த திருமணத்தில் ஹாலிவுட் நட்சத்திரங்கள் கிம் கர்தாஷியன் மற்றும் க்ளோ கர்தாஷியன், சாம்சங் தலைவர் லீ ஜே-யோங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Radhika Merchant
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி மற்றும் நீதா அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி. நேற்று மும்பையின் ஜியோ உலக மாநாட்டு மையத்தில் நடந்த ஆடம்பரமான விழாவில் ராதிகா மெர்ச்சண்டை திருமணம் செய்து கொண்டார்.
Radhika Merchant Pics
ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட்டின் திருமணத்திற்கு முந்தைய விழாக்கள் மார்ச் மாதத்தில் மூன்று நாள் கொண்டாட்டங்களுடன் தொடங்கியது, குஜராத்தின் ஜாம் நகரில் நடந்த இந்த ப்ரீ வெட்டிங்கில் சர்வதேச பிரபலங்கள், பாலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்டனர். குறிப்பாக பிரபல பாப் பாடகி ரிஹானாவின் தனிப்பட்ட இசை நிகழ்ச்சி ப்ரீ வெட்டிங்கின் சிறப்பம்சமாக அமைந்தது.
Radhika Merchant
இதை தொடர்ந்து ஜூன் தொடக்கத்தில் ஐரோப்பாவில் முழுவதும் பயணித்த ஒரு சொகுசு கப்பலில் ஆனந்த் - ராதிகாவின் 2-வது ப்ரீ வெட்டிங் நடந்தது. கடந்த வாரம் முதலே ஆனந்த் - ராதிகாவின் திருமண கொண்டாட்டங்கள் தொடங்கின.
Radhika Merchant Latest Pics
அம்பானி குடும்பத்தினர் நடத்திய சங்கீத் நிகழ்ச்சியில் ஜஸ்டின் பீபர் இசை நிகழ்ச்சியை நடத்தினார். பின்னர் ஹல்தி, விழா, மெஹந்தி விழா, சிவசக்தி பூஜை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை அம்பானி குடும்பத்தினர் நடத்தினர்.
Anant Ambani Radhika Merchant Pics
இந்த நிலையில் நேற்று ஆனந்த் - ராதிகா திருமணம் கோலாகலமாக நடந்தது. ஆனந்த் அம்பானியின் மனைவியும் அம்பானி வீட்டு இளைய மருமகளுமான ராதிகா மெர்ச்சண்டி புதிய கண்கவர் போட்டோக்கள் இணையத்தில் படு வைரலாகி வருகின்றன. இந்த போட்டோக்களுக்கு லைக்களும் கமெண்ட்களும் குவிந்து வரும் நிலையில் பலரும் ஆனந்த் - ராதிகா தம்பதிக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.