- Home
- Gallery
- இவங்க மட்டும் எப்படி 60 வயசுலயும் இவ்வளவு யங்கா இருக்காங்க.. நீதா அம்பானியின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..
இவங்க மட்டும் எப்படி 60 வயசுலயும் இவ்வளவு யங்கா இருக்காங்க.. நீதா அம்பானியின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..
பொதுவாக எந்தவொரு விழாவாக இருந்தாலும் அம்பானி வீட்டு பெண்கள் தங்கள் தனித்துவமான ஆடைகள், நகைகள் மூலம் அனைவரின் கவனத்தை ஈர்த்து வருகின்றனர்.

பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்டின் திருமண கொண்டாட்டங்னள் கடந்த வாரம் முதல் இந்த திருமணம் கொண்டாட்டங்கள் தொடங்கிவிட்டன. சங்கீத், ஹல்தி, மெஹந்தி விழா, சிவ சிவசக்தி பூஜை என பல நிகழ்ச்சிகளை அம்பானி குடும்பத்தினர் நடத்தினர். இந்த விழாக்களில் பல்வேறு பாலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
பல கொண்டாட்டங்களை தொடர்ந்து பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆனந்த் - ராதிகா திருமணம் நேற்று நடைபெற்றது. மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்டு செண்டரில் நடந்த இந்த விழாவில் இந்திய பிரபலங்கள் மட்டுமின்றி சர்வதேச பிரபலங்களும் தொழிலதிபர்களும் பங்கேற்றனர்.
குறிப்பாக இந்த திருமண நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகர்கள் சல்மான் கான், ஷாருக்கான், ரன்வீர் சிங், தீபிகா படுகோன், ரன்வீர் கபூர், ஆலியா பட், அமிதாப் பச்சன், ஜெயா பச்சன், அபிஷேக் பச்சன் ஐஸ்வர்யா ராய் பச்சன் என பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
அதே போல் தமிழ் திரையுலகில் இருந்து ரஜினி சூர்யா ஜோதிகா, விக்னேஷ் ஷிவன் நயன்தாரா, அட்லீ, பிரியா என பல பிரபலங்கள் கலந்துகொண்டனர். அம்பானி மகன் திருமணத்தில் ரஜினிகாந்த் தனது குடும்பத்தினருடன் பங்கேற்றார். ராம் சரண், மகேஷ் பாபு, ராணா டகுபதி உள்ளிட்ட தெலுங்கு திரையுலகினும் இதில் பங்கேற்றனர்.
அம்பானி வீட்டு திருமணத்தில் பிரபலங்கள் கலந்து கொண்ட போட்டோக்கள் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. திருமணத்திற்கு ராதிகா மெர்ச்சண்ட் நடத்திய போட்டோஷூட் தொடர்பான புகைப்படங்களும் வெளியானது.
பொதுவாக எந்தவொரு விழாவாக இருந்தாலும் அம்பானி வீட்டு பெண்கள் தங்கள் தனித்துவமான ஆடைகள், நகைகள் மூலம் அனைவரின் கவனத்தை ஈர்த்து வருகின்றன. அந்த வகையில் மகன் திருமணத்தில் நீதா அம்பானி அணிந்திருந்த பட்டுப்புடவை பேசு பொருளாகி உள்ளது.
இந்திய கைவினைஞர்களால் உருவாக்கப்பட்ட ‘ரங்கத்’ காக்ரா பட்டுப்புடவையை நீதா அம்பானி உடுத்தி இருந்தார். நீதா அம்பானிக்காக அபு ஜானி சந்தீப் கோஸ்லா வடிவமைத்த இந்த காக்ரா பட்டுப்படவை, பீச், சில்வர், ப்ளஷ் பிங்க் மற்றும் பிஸ்தா பச்சை ஆகிய வண்ணங்களைக் கொண்டுள்ளது.
இந்த புடவையை தயாரிக்க 40 நாட்களுக்கு மேல் ஆனதாக கூறப்படுகிறது. நாட்டின் சிறந்த கைவினைஞர்களான விஜய் குமார் மற்றும் மோனிகா மவுரியா ஆகியோரால் இந்த புடவை வடிவமைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது
வைர நகைகள், நேர்த்தியான சிகை அலங்காரம் மற்றும் மேக்கப்புடன் நீதா அம்பானி ராஜ தோற்றத்திற்குக் குறையாமல் காட்சியளித்தார். நீதா அம்பானியின் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், 60 வயதாகும் நீதா அம்பானி எப்படி இவ்வளவு இளமையாகவும் அழகாகவும் இருக்கிறார் என்று தங்கள் வியப்பை வெளிப்படுத்தி வருகின்றன.