- Home
- Gallery
- ஜெயாவை திருமணம் செய்ய அமிதாப் பச்சன் போட்ட கண்டிஷன் இதுதான்.. பல ஆண்டுகளுக்கு பின் வெளியான ரகசியம்..
ஜெயாவை திருமணம் செய்ய அமிதாப் பச்சன் போட்ட கண்டிஷன் இதுதான்.. பல ஆண்டுகளுக்கு பின் வெளியான ரகசியம்..
ஜெயா பச்சனை திருமணம் செய்து கொள்ள அமிதாப் பச்சன் ஒரு நிபந்தனை விதித்தார் என்று உங்களுக்கு தெரியுமா? இதுகுறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

Amitabh Bachchan Jaya Bachchan
பாலிவுட்டின் பழம்பெரும் நட்சத்திர ஜோடிகளாக அமிதாப் பச்சன் - ஜெயா பச்சன் தம்பதி வலம் வருகின்றனர். பல்வேறு சோதனையான காலங்களிலும் ஜெயா பச்சன் தனது கணவருக்கு உறுதுணையாக இருந்தார். குறிப்பாக பாலிவுட்டின் பழம்பெரும் நடிகை ரேகா உடனான உறவு அமிதாப் பச்சனின் உறவு குறித்து ஊடகங்களில் பல வதந்திகள் பரவிய போது, ஜெயா பச்சன், அவை வெறும் வதந்திகள் என்பதை நிரூபித்தார். ஆனால், ஜெயா பச்சனை திருமணம் செய்து கொள்ள அமிதாப் பச்சன் நிபந்தனை விதித்துள்ளார் என்று உங்களுக்கு தெரியுமா? இதுகுறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
Amitabh Bachchan Jaya Bachchan
அமிதாப்பும் ஜெயாவும் 1973 ஆம் ஆண்டு எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டனர். ஆனால், திருமணத்திற்கு முன், ஜெயா தனது வேலை நேரத்தை குறைக்க வேண்டும் என்று அமிதாப் நிபந்தனை விதித்திருந்தார். ஆம். ஜெயா பச்சன் சமீபத்தில் இதுகுறித்து பேசியிருந்தார்.
Amitabh Bachchan Jaya Bachchan
அப்போது பேசிய அவர் “ அக்டோபர் மாதம் தான் எனக்கு வேலை குறைவாக இருக்கும் என்பதால் நாங்கள் அக்டோபர் மாதம் திருமணம் செய்தோம். ஆனால் அப்போது அமிதாப் 9 முதல் 5 வரை பணிபுரியும் மனைவி எனக்கு வேண்டாம் என்று கூறினார். மேலும் நீ வேலை செய்யலாம்,
Amitabh Bachchan Jaya Bachchan
ஆனால் திருமணத்திற்கு பின் உனது வேலை நேரத்தை குறைத்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார். திருமணத்திற்கு பின்பும் படங்களில் நடிக்கலாம். ஆனால் தினமும் வேலை இருக்கக்கூடாது. நீ சரியான நபர்களுடன் வேலை செய்ய வேண்டும்” என்றும் அவர் கூறினார்.
Amitabh Bachchan Jaya Bachchan
மேலும் தனது திருமணம் குறித்து தந்தையிடம் பேசிய போது அவர் மகிழ்ச்சி அடையவில்லை என்றும் ஜெயா பச்சன் தெரிவித்தார்.
Amitabh Bachchan Jaya Bachchan
இதனிடையே அமிதாப் பச்சனும் ஒருமுறை தனது மனைவி ஜெயா பச்சனை பாராட்டினார். அவர் படங்களுக்கு முன்னுரிமை கொடுக்காமல் குடும்பத்திற்கு கொடுத்தாதாக அமிதாப் கூறினார். ஜெய்யா பச்சன் வீட்டிலேயே தங்கி தங்களின் குழந்தைகளான அபிஷேக் பச்சன் மற்றும் ஸ்வேதா பச்சனை கவனித்துக் கொண்டார்.
Amitabh Bachchan Jaya Bachchan
ஜெயாவின் இந்த செயல் மிகவும் பாராட்டத்தக்க விஷயம். நான் படங்களில் நடிப்பதற்கும் அவர் எந்த தடையும் விதிக்கவில்லை. இது முழுக்க முழுக்க ஜெயாவின் முடிவு. திருமணத்தில், எல்லா முடிவுகளும் மனைவியால் எடுக்கப்படுகின்றன." என்று அமிதாப் பச்சன் ஒரு பேட்டியில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.