- Home
- Gallery
- Kalki 2898 AD: "என்னை கொலை பண்ணிடாதீங்க.." பிரபாஸ் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட அமிதாப்.. ஏன் தெரியுமா?
Kalki 2898 AD: "என்னை கொலை பண்ணிடாதீங்க.." பிரபாஸ் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட அமிதாப்.. ஏன் தெரியுமா?
கல்கி 2898 ஏடி படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், பிரபாஸ் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டார்

Kalki
இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றான கல்கி 2898 ஏடி படம் நாளை மறு தினம் வெளியாக உள்ளது. இந்த படத்தின் புரமோஷன் பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
அந்த வகையில் கல்கி 2898 ஏடி படத்தின் தயாரிப்பு நிறுவனமான வைஜெயந்தி நெட்வொர்க் புதிய வீடியோவை வெளியிட்டுள்ளது. நடிகர்கள் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோ மற்றும் தயாரிப்பாளர்கள் பிரியங்கா தத் மற்றும் ஸ்வப்னா தத், பிரபாஸ் படம் குறித்து சுவாரஸ்ய தகவல்களை பேசினார்.
Kalki 2898 AD press meet
அப்போது பேசிய பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், பிரபாஸ் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டார். இந்த படத்தில் தனது கேரக்டருக்காக இயக்குனர் தன்னை முதன்முதலில் அணுகியதை அமிதாப் நினைவு கூர்ந்தார். அப்போது தான் பிரபாஸின் ரசிகர்களிடம் அமிதாப் மன்னிப்பு கேட்டார்.
Kalki 2898 AD
இதுகுறித்து பேசிய அவர் “நாகி (நாக் அஷ்வின்) என்னிடம் இதைப் பற்றி பேச வந்தபோது, அவர் ஒரு படத்தைக் கொண்டு வந்தார், என் கதாபாத்திரம் எப்படி இருக்கும், பிரபாஸ் எப்படி இருக்கப் போகிறார் என்ற காட்சி. மேலும் பிரபாஸைத் தூக்கி எறியும் மிகப் பெரிய ஆள் நான். மேலும் பிரபாஸின் ரசிகர்கள் அனைவரும் தயவுசெய்து என்னை மன்னிக்கவும், படத்தில் நான் செய்வதைப் பார்த்த பிறகு என்னை படுகொலை செய்யாதீர்கள்" என்று அமிதாப் கூறினார்.
Kalki 2898 AD
அப்போது குறுக்கிட்ட பிரபாஸ் தனது ரசிகர்களும் உங்களை விரும்புவார்கள் என்று உறுதியளித்தார். மேலும் “ அவர்கள் அனைவரும் உங்கள் ரசிகர்கள்," என்று அவர் கூறினார்.
மும்பையில் சமீபத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமிதாப், "நாக் அஸ்வின் வந்து என்னிடம் தனது யோசனையை விளக்கியபோது, 'நாகி என்ன குடிக்கிறாரா' என்று நீண்ட நேரம் நான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் நம்பவே முடியாத அசாத்திய் செயல்களை அவர் செய்தார்.
Kalki 2898 AD
இதுபோன்ற ஒரு படத்தை உருவாக்க வேண்டுமெனில் இனி யாராவது பிறந்து தான் வரவ் வேண்டும். அவர் என்ன நினைத்தாலும் அதை திரையில் கொண்டு வந்தார் . அது உண்மையில் ஆச்சரியமாக இருந்தது. நான் அதில் ஒரு பகுதியாக இருப்பது, என்னால் மறக்க முடியாத ஒரு அனுபவம்." என்று கூறியிருந்தார்.
Kalki 2898 AD
மகாபாரத காலத்திலிருந்து தொடங்கும் இந்த கதை எதிர்காலத்தில் பல நூற்றாண்டுகள் வரை தொடரும் என்றும் இயக்குனர் கூறியுள்ளார். இப்படத்தில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா பதானி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசைமைத்துள்ளார். பான் இந்தியா படமாக உருவாகி வரும் இந்த படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பன்மடங்கு அதிகரித்துள்ளது.