'இந்த' ஒரு எண்ணெய் போதும்... உடலில் இருக்கும் ஸ்ட்ரெட்ச் மார்க்ஸ் விரைவில் மறையும்..!
ஸ்ட்ரெச் மார்க்ஸ் வயிற்றில் மட்டுமல்ல, உடலின் அனைத்து பாகங்களிலும் ஏற்படலாம். இதை போக்க மாதுளை விதை எண்ணெயை பயன்படுத்துவது சிறந்தது.

ஸ்ட்ரெச் மார்க்ஸ் பற்றி உங்கள் அனைவருக்கும் தெரியும். தோல் விரிவடையும் போது ஏற்படும் வடு தான் இது. இது பொதுவாக கர்ப்பிணிப் பெண்களுக்கு அதிகம் காணப்படுகிறது. பிரசவத்திற்குப் பிறகு, அவர்கள் முந்தைய உடல் வடிவத்திற்குத் திரும்பும்போது இந்த ஸ்ட்ரெச்மார்க் தெரியும்.
இந்த ஸ்ட்ரெச் மார்க்ஸ் எளிதில் நீங்காது. இவற்றைக் குறைக்க பலர் ரசாயனப் பொருட்களைப் பயன்படுத்துகின்றனர். ஆனால் இவற்றுக்குப் பதிலாக.. இயற்கையாகக் கிடைக்கும் வீட்டு வைத்தியங்களைப் பயன்படுத்துவதும் சருமத்திற்கு நல்லது. அந்தவகையில், இந்த ஸ்ட்ரெச் மார்க் பிரச்சனையில் இருந்து விடுபட மாதுளை விதை எண்ணெய் சிறந்ததாக கூறப்படுகிறது.
மாதுளை விதை எண்ணெய் இந்த குறிகளை நீக்குவதில் நன்றாக வேலை செய்யும் தெரியுமா.. ஏனெனில், இந்த எண்ணெயில் அந்தோசயினின்கள், பாலிபினால்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளன. இவை தோல் வயதான மற்றும் சேதத்தை ஏற்படுத்தும் ஃப்ரீ ரேடிக்கல்களைக் குறைக்க உதவுகின்றன.
இதையும் படிங்க: புற்றுநோயை தடுப்பது முதல் இதய ஆரோக்கியம் வரை.. தினமும் மாதுளை ஜூஸ் குடிப்பதால் இத்தனை நன்மைகளா?
மேலும் இது சருமத்தில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்தாது. இந்த எண்ணெயைப் பயன்படுத்துவதால் கொலாஜன் உற்பத்தியும் அதிகரிக்கிறது. சருமத்தில் உள்ள ஸ்ட்ரெச் மார்க்ஸை நீக்க குறைக்கவும், புதிய செல்கள் உருவாகவும் உதவுகிறது.
இதையும் படிங்க: வயசானாலும் பார்க்க என்றும் வசீகரமான, இளமையான தோற்றத்தில் இருக்க ஆசையா ? அப்போ இது ஒன்று போதுமே !
அதுமட்டுமின்றி, இந்த எண்ணெயைப் பயன்படுத்துவதால் சருமம் ஈரப்பதமாகிறது. இதனால் ஸ்ட்ரெச் மார்க்ஸ் விரைவில் குறையும். எனவே இந்த எண்ணெயைப் பயன்படுத்துவது சருமத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். மேலும் இது சருமத்தை பொலிவாக்கும்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D