ஐஸ் வாட்டரை ஒருமுறை இப்படி யூஸ் பண்ணி பாருங்களே.. முகம் பொலிவாகும்..!
Ice Water Benefits For Face : பெண்கள் தங்கள் முக அழகுக்காக பல வகையான பியூட்டி டிப்ஸ்களை பின்பற்றுகிறார்கள் அவற்றில் ஒன்றுதான் ஐஸ் வாட்டரை பயன்படுத்துவது. அதை ஏன் பயன்படுத்த வேண்டும் என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

தங்கள் முகம் எப்போதும் பார்ப்பதற்கு அழகாகவும், பொலிவாகவும் இருக்க வேண்டும் என்று பெண்கள் விரும்புகிறார்கள். இதற்காக அவர் அவர்கள் பல பியூட்டி டிப்ஸ்களை பின்பற்றுகிறார்கள். அவற்றில் ஒன்றுதான் ஐஸ் வாட்டரை கொண்டு முகத்தை கழுவுவது.
பலரும் ஐஸ்வாட்டரை முகத்திற்கு பயன்படுத்துகிறார்கள். இது நிச்சயம் நல்ல பன்களை தரும் இன்று பலர் சொல்லுகிறார்கள். எனவே, இந்த பதிவில் முகத்திற்கு ஏன் பயன்படுத்த வேண்டும் என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
ஐஸ்வாட்ரை கொண்டு முகத்தை கழுவினால் சருமம் ஈரப்பதத்துடன் இருக்கும். இதனுடன் முகத்தில் பளபளப்பு தோன்ற ஆரம்பிக்கும். அதுவும் குறிப்பாக, எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள் ஐஸ் வாட்டரை தினமும் பயன்படுத்துவது ரொம்பவே நல்லது.
இது தவிர இந்த நீரானது சூரிய ஒளியால் ஏற்படும் எரிச்சலில் இருந்தும் உங்களை பாதுகாக்கிறது. அதுமட்டுமல்லாமல், தூங்கி எழுந்தவுடன் சிலருக்கு முகம் வீங்கி இருக்கும். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் ஐஸ் தண்ணீரை கொண்டு முகத்தில் கழுவினால் வீக்கம் குறையும்.
ஐஸ் வாட்டர், முகத்தில் இருக்கும் பருக்கள் மச்சங்கள் போன்ற சருமப் பிரச்சனைகளை குறைக்க உதவும். மேலும், இது சருமத்தின் துளைகளை சுருக்கி அதை சுத்தமாக வைத்திருக்க உதவுகிறது. குறிப்பாக, சருமத்தை மென்மையாக்கும்.
இதையும் படிங்க: ஐஸ் ஃபேஷியல் செய்யும்போது இந்த தவறை ஒருபோதும் செய்யாதீங்க..!!
இதை பயன்படுத்த முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி அதில் ஐஸ் கட்டிகளை போடவும். பனிக்கட்டி தண்ணீரில் நன்கு கரைந்த பிறகு முகத்தில் தடவவும்.
இதையும் படிங்க: Beauty Tips : அடிக்கும் வெயிலில் முகம் பளபளக்க 'இந்த' ஐஸ் கட்டியை கொண்டு முகத்தை மசாஜ் செய்யுங்கள்..!!
அதுமட்டுமின்றி, வேப்ப இலைகளை வேக வைத்த நீ இதை ஐஸ் கியூப் ட்ரேயில் ஊற்றி அதை ஃப்ரீசரில் வைத்து ஐஸ் க்யூப் ஆனதும், அதை உங்கள் முகத்தில் தடவவும். இதை ஒரு நாளைக்கு இரண்டு முறை பயன்படுத்தலாம். இவ்வாறு செய்தால் உங்கள் முகம் பளபளப்பாக இருக்கும்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D