- Home
- Gallery
- இதெல்லாம் மர்டரா..? அடுத்த டார்கெட் நீங்க தான்! உதயநிதி - முதல்வர் ஸ்டாலினை எச்சரித்த அல்போன்ஸ் புத்திரன்!
இதெல்லாம் மர்டரா..? அடுத்த டார்கெட் நீங்க தான்! உதயநிதி - முதல்வர் ஸ்டாலினை எச்சரித்த அல்போன்ஸ் புத்திரன்!
'பிரேமம்' படத்தின் மூலம் பிரபலமான இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன், வதந்திகளை பரப்பும் விதமாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் பதிவிட்டுள்ள பதிவு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Alphones Puthren
2013 ஆம் ஆண்டு, நடிகர் நிவின் பாலி மற்றும் நஸ்ரியா நடிப்பில் வெளியான 'நேரம்' படத்தின் மூலம் மலையாளம் மற்றும் தமிழில் இயக்குனராக அறிமுகமானவர் அல்போன்ஸ் புத்திரன். இதைத்தொடர்ந்து 2015 ஆம் ஆண்டு நிவின் பாலி, சாய் பல்லவி, அனுப்பமா பரமேஸ்வரன், மடோனா செபஸ்டின் ஆகியோர் நடித்த 'பிரேமம்' படத்தை இயக்கினார். இந்த படத்திற்கு மலையாள திரை உலக மட்டுமின்றி தமிழிலும் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது அதேபோல் இந்த படத்தில் நடித்த மூன்று நடிகைகளும், திரையுலகில் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்து, தற்போது நிலையான ஹீரோயின் என்கிற இடத்தை பிடித்து விட்டனர்.
கடந்த ஆண்டு பிரித்திவிராஜ் மற்றும் நயன்தாராவை வைத்து அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய கோல்ட் தோல்வியை தழுவிய நிலையில், தற்போது சாண்டி, கோவை சரளா, உள்ளிட்ட பலர் நடித்து வரும் 'கிப்ட்' என்கிற படத்தை, தமிழில் இயக்கி வருகிறார். மேலும் சில மாதங்களுக்கு முன்பு, தனக்கு டவுன் சின்ரோம் குறைபாடு இருப்பதாகவும் எனவே தன்னுடைய கடைசி திரைப்படம் இதுதான் என்பதையும் அறிவித்தார்.
முன்பை விட, உடல் மெலிந்து காணப்படும் இவர்... அடுத்தடுத்து சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாத வகையில் சில பதிவுகளை போட்டு வருகிறார். அந்த வகத்தில் தற்போது... தற்போது விஜயகாந்த், ஜெயலலிதா, கலைஞர் கருணாநிதி, ஆகியோர் மரணம் மர்டர் என கூறி முதல்வரையும் அவரது மகன் உதயநிதியையும் எச்சரிக்கும் விதமாக போட்டுள்ள பதிவு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த பதிவில் அல்போன்ஸ் புத்திரன் கூறியுள்ளதாவது, "அன்புள்ள உதயநிதி அண்ணா... நான் முன்பு கேரளாவில் இருந்து ரெட் ஜெயின் நிறுவனத்திற்கு உங்களை சந்திக்க வருகை தந்த போது, உங்களை அரசியலுக்கு வரும்படி வலியுறுத்தினேன். அந்த நேரத்தில், கலைஞர் கருணாநிதி மற்றும் ஜெயலலிதா ஆகியோரை கொலை செய்தவர்களை கண்டுபிடிக்குமாறு கேட்டுக் கொண்டேன். இப்போது நீங்கள் விஜயகாந்தை கொலை செய்தவர்களையும் கண்டுபிடிக்க வேண்டும். ஏற்கனவே முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களையும், இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் கமலஹாசனையும் கொலை செய்ய முயற்சிகள் நடந்திருக்கின்றன. இதற்கு மேலும் நீங்கள் பொறுமை காத்தால்... அவர்களின் அடுத்த டார்கெட் நீங்கள் தான்.
Vijayakanth Wish: இரண்டு மகன்கள் இருந்தும்... கடைசி வரை நிறைவேறாமல் போன விஜயகாந்தின் ஆசை!
நேரம் படம் பார்த்தபோது, உங்களுக்கு படம் பிடித்திருந்தது. எனவே 15 நிமிடங்களில் ஆப்பிள் ஷோரூமுக்கு போன் செய்து, எனக்கு ஒரு புதிய ஐபோனை நீங்கள் வாங்கி கொடுத்தீர்கள். எனவே இந்த கொலையாளிகளை கண்டுபிடிப்பது உங்களுக்கு அதைவிட மிகவும் எளிமையானது தான் என கூறியுள்ளார்.அல்போன்ஸ் புத்திரன் இந்த பதிவை கண்டு அதிர்ச்சியடைந்து பலர்... இவருக்கு என்ன ஆனது? ஏன் இப்படியெல்லாம் வதந்திகளை பரப்பி வருகிறார் என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.