- Home
- Gallery
- மீண்டும் இணைந்த சூரரைப் போற்று வெற்றி கூட்டணி.. ஜி.வி பிரகாஷ் பகிர்ந்த போட்டோஸ்.. குவியும் வாழ்த்து..
மீண்டும் இணைந்த சூரரைப் போற்று வெற்றி கூட்டணி.. ஜி.வி பிரகாஷ் பகிர்ந்த போட்டோஸ்.. குவியும் வாழ்த்து..
சூரரைப் போற்று படத்தின் ஹிந்தி ரீமேக்கான சர்ஃபிரா படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரினிங் நிகழ்வு நேற்று மும்பையில் நடைபெற்றது. இதில் அக்ஷய் குமார், சூர்யா, சுதா கோங்கரா உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்

Sarfira screening
சுதா கோங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த 2020-ம் ஆண்டு வெளியான படம் சூரரைப் போற்று. ஏர் டெக்கான் நிறுவனர் கோபிநாத்தின் வாழ்க்கை வரலாறு படமாக உருவான இந்த படத்தில் ஊர்வசி, அபர்ணா பாலமுரளி, பரேஷ் ராவல், மோகன் பாபு, கருணாஸ் உள்ளிட்டோ முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். நேரடியாக ஓடிடியில் வெளியான இந்த படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.
Sarfira
சூரரை போற்று படத்தை சுதா கோங்கரா ஹிந்தியில் ரீமேக் செய்துள்ளார். சர்ஃபிரா என்ற பெயரில் உருவாகி உள்ள இந்த படத்தில் சூர்யா நடித்த ரோலில் அக்ஷய் குமார் நடிக்கிறார். இது அக்ஷய் குமாரின் 150-வது படமாகும். தமிழை போலவே ஹிந்தி ரீமேக்கையும் சூர்யா தான் தயாரித்துள்ளார். சர்ஃபிரா படத்தில் சூர்யா கேமியோர் ரோலிலும் நடித்துள்ளார்.
Sarfira screening
இந்த நிலையில் சர்ஃபிரா படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரினிங் நிகழ்வு நேற்று மும்பையில் நடைபெற்றது. இதில் அக்ஷய் குமார், சூர்யா, சுதா கோங்கரா, ஜோதிகா, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். இதுதொடர்பான போட்டோக்களும் வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
GV Prakash Sarfira
இதுதொடர்பான புகைப்படங்களை ஜிவி பிரகாஷ் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் சூர்யா, சுதா கோங்கராவுடன் எடுத்த செல்ஃபி புகைப்படங்களையும் அவர் பதிவிட்டுள்ளார்.
GV Prakash Sudha Kongara
சூர்யா மற்றும் சுதா கொங்கராவுடன் செல்ஃபிக்கு போஸ் கொடுத்தார். அதே போல் சர்ஃபிரா திரையிடல் நிகழ்வில் ஜோதிகாவுடன் எடுக்கப்பட்ட புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
சர்ஃபிரா படத்தை அருணா பாட்டியா, விக்ரம் மல்ஹோத்ரா ஆகியோருடன் இணைந்து சூர்யா மற்றும் ஜோதிகா ஆகியோர் தயாரித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
akshay kumar suriya
சர்ஃபிரா படத்தின் டிரைலர் ஜூன் 18ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. சுதா கொங்கரா இயக்கிய இப்படம் ஜூலை 12, 2024 திரையரங்குகளில் வெளியாக உள்ளது.