அனிருத் வீட்டு பூஜையில் அம்மாவோடு ஆஜரான அஜித் மகள் அனோஷ்கா - வைரலாகும் போட்டோஸ்
இசையமைப்பாளர் அனிருத்தின் வீட்டில் நடைபெற்ற கொலு பூஜையில் அஜித்தின் மனைவி ஷாலினி மற்றும் அவரது மகள் அனோஷ்கா ஆகியோர் கலந்துகொண்டனர்.
anirudh with ajith family
தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் அனிருத். கோலிவுட்டின் டாப் ஹீரோஸ் நடிக்கும் படங்கள் அனைத்தும் தற்போது அனிருத் கைவசம் தான் உள்ளது. அண்மையில் வெளியான ஷாருக்கானின் ஜவான் படம் மூலம் பாலிவுட்டிலும் அறிமுகமானார் அனிருத். இதுதவிர தெலுங்கிலும் அடுத்தடுத்து சில படங்களில் கமிட் ஆகி இருக்கும் அனிருத், பான் இந்தியா அளவில் செம்ம பிசியான இசையமைப்பாளராக வலம் வருகிறார்.
anirudh house ayudha pooja celebration
அண்மையில் அனிருத் இசையமைப்பில் வெளிவந்த லியோ திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிநடைபோட்டு வருகிறது. இப்படத்தின் வெற்றிக்கு அனிருத்தின் இசை மற்றும் பாடல்களும் முக்கிய பங்காற்றி இருக்கின்றன.
anirudh parents
லியோ வெற்றியால் செம்ம ஹாப்பியாக இருக்கும் அனிருத், தன்னுடைய பேமிலியுடன் சேர்ந்து ஆயுத பூஜை கொண்டாடிய புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் செம்ம வைரலாகி வருகின்றன.
anirudh with shalini and anoushka ajith
அனிருத் வீட்டு ஆயுத பூஜை கொண்டாட்டத்தில் நடிகர் அஜித்தின் குடும்பத்தினரும் கலந்துகொண்டனர். அஜித் மனைவி ஷாலினி, மகள் அனோஷ்கா மற்றும் மகன் ஆத்விக் ஆகியோருடன் அனிருத் எடுத்த புகைப்படம் இது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
anirudh, latha rajinikanth
அதேபோல் நடிகர் ரஜினிகாந்தின் குடும்பத்தினரும் அனிருத் வீட்டு பூஜையில் கலந்துகொண்டனர். ரஜினியின் மனைவி லதா ரஜினிகாந்த் உடன் அனிருத் எடுத்துக்கொண்ட அழகிய போட்டோ இதோ.
anirudh, soundarya rajinikanth
ரஜினியின் மகள் செளந்தர்யாவும் அனிருத் வீட்டு ஆயுத பூஜை கொண்டாட்டத்தில் கலந்துகொண்டார். செளந்தர்யா மற்றும் அவரது மகனை கட்டியணைத்தவாரு அனிருத் கொடுத்த அசத்தல் போஸ் இது.
anirudh family
இதுதவிர நடிகர் சிவகார்த்திகேயனின் மனைவி ஆர்த்தி மற்றும் பல பிரபலங்களும் அனிருத் வீட்டு ஆயுத பூஜை கொண்டாட்டத்தில் கலந்துகொண்டனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் செம்ம வைரலாகி வருகின்றன.
இதையும் படியுங்கள்... டெலிடெட் சீனை வெளியிட்டு... லோகேஷ் முட்டு கொடுப்பதாக கிண்டலடித்தவர்களுக்கு நெத்தியடி ரிப்ளை கொடுத்த லியோ டீம்