- Home
- Gallery
- Anikha: அழகில் நயன்தாராவையே ஓவர் டேக் பண்ணிட்டாங்க! பருவ வயதில் பளிங்கி சிலையாய் மாறிய அனிகாவின் போட்டோஸ்!
Anikha: அழகில் நயன்தாராவையே ஓவர் டேக் பண்ணிட்டாங்க! பருவ வயதில் பளிங்கி சிலையாய் மாறிய அனிகாவின் போட்டோஸ்!
குட்டி நயன் என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் அனிகா சுரேந்தரின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

கேரளாவை பூர்வீகமாக கொண்ட நடிகை அனிகா சுரேந்திரன், தமிழில் இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் அஜித் - திரிஷா நடித்து வெளியான 'என்னை அறிந்தால்' படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமானவர். தல அஜித்துக்கு ரீல் மகளாக நடித்ததால்... தன்னுடைய முதல் படத்திலேயே ரசிகர்களின் செல்ல குட்டியாக மாறிய இவர் பின்னர் மிருதன், நானும் ரவுடி தான் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து பிரபலமானார்.
அதே போல் இயக்குனர் சிறுத்தை சிவா நடிப்பில், அஜித்தை நடித்த விஸ்வாசம் படத்தில் இரண்டாவது முறையாக அஜித்துக்கு மகளாக நடித்தார். இந்த படத்தில் அனிகாவின் அம்மா ரோலில் நடித்தவர் நடிகை நயன்தாரா தான். ஏற்கனவே அனிகா பார்ப்பதற்கு நயன்தாராவின் மினியேச்சர் மாதிரி உள்ளதாக கூறி வந்த நடிகர்கள் இந்த படத்திற்கு பின்னர் இவரை குட்டி நயன்தாரா என்றே அழைக்க தொடங்கி விட்டனர்.
குழந்தை நட்சத்திரம் என்கிற இமேஜை உடைத்து, இளம் நாயகியாக தென்னிந்திய திரையுலகில் அவதாரம் எடுத்துள்ள அனிகா, ஏற்கனவே தெலுங்கில் புட்ட பொம்மை, மலையாளத்தில் ஓ மை டார்லிங் போன்ற படங்களில் நடித்துள்ள நிலையில், தமிழில் தனுஷ் தன்னுடைய அக்கா மகனை கதாநாயகனாக வைத்து இயக்கியுள்ள படத்திலும் ஹீரோயினாக நடித்துள்ளார்.
மேலும் தனுஷின் டி50, சமீபத்தில் வெளியான PT போன்ற படங்களிலும் அழுத்தமான வேடங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் நயன்தாராவையே ஓவர் டேக் செய்யும் விதத்தில்... பச்சை நிற லெஹங்காவில் செம்ம ஹாட்டாக வெளியிட்டுள்ள போட்டோஸ் சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.