- Home
- Gallery
- பொண்ண பெக்க சொன்னா தேவதைய பெத்து வச்சிருக்காங்க... அஜித் - ஷாலினியின் மகள் அனோஷ்காவின் கார்ஜியஸ் கிளிக்ஸ்
பொண்ண பெக்க சொன்னா தேவதைய பெத்து வச்சிருக்காங்க... அஜித் - ஷாலினியின் மகள் அனோஷ்காவின் கார்ஜியஸ் கிளிக்ஸ்
நடிகர் அஜித் குமார், நடிகை ஷாலினி ஜோடியின் ஒரே மகளான அனோஷ்காவின் அன்சீன் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

shalini daughter
அஜித் ஷாலினி ஜோடிக்கு திருமணமாகி 8 ஆண்டுகளுக்கு பின்னர் தவமிருந்து பெற்ற மகள் தான் அனோஷ்கா. அவர் சிறுவயதில் பப்ளி பேபியாக இருக்கும் போது தனது தாய் ஷாலினியுடன் எடுத்துக் கொண்ட லவ்லி போட்டோ இது.
Ajith daughter
மகள்கள் எப்போதுமே அப்பா செல்லம் தான். அனோஷ்காவும் அதற்கு விதிவிலக்கல்ல. தன் தந்தையின் மடியில் துள்ளி விளையாடும் மழலையாய் இருக்கும் அனோஷ்காவின் கேண்டிட் கிளிக் இது.
Ajith son and Daughter
அனோஷ்கா பிறந்து 7 ஆண்டுகளுக்கு பின்னர் தான் அஜித் ஷாலினி ஜோடிக்கு இரண்டாவது குழந்தை பிறந்தது. தன் செல்லத் தம்பி ஆத்விக் உடன் ஆசையாக அனோஷ்கா எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படம் இது.
Shalini, anoushka
மளமளவென வளர்ந்துவிட்ட அனோஷ்காவுக்கு தற்போது 16 வயது ஆகிறது. அழகில் அம்மாவுக்கே டஃப் கொடுக்கும் அனோஷ்கா ஷாலினியுடன் வைப் செய்தபோது எடுத்துக்கொண்ட செல்பி கிளிக் இது.
இதையும் படியுங்கள்... KGF பட இயக்குனர் பிரசாந்த் நீலுடன் கூட்டணி வைக்கப்போகும் அஜித்! ரசிகர்களுக்கு காத்திருக்கும் டபுள் ட்ரீட்!
Anoushka Ajith with her Family
நடிகர் அஜித் அடிக்கடி குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சுற்றுலா செல்வதை வழக்கமாக வைத்திருப்பார். அப்படி துபாய்க்கு சென்றபோது அங்கு மகன், மகள் மற்றும் மனைவியுடன் அஜித் எடுத்துக்கொண்ட பேமிலி போட்டோ இது.
Anoushka CSK fan
தமிழ்நாட்டில் இருந்துகொண்டு சிஎஸ்கே ரசிகராக இல்லேனா எப்படி. நடிகர் அஜித்தின் மகள் அனோஷ்கா, மனைவி ஷாலினி, மகன் ஆத்விக் ஆகியோர் வெறித்தனமான சிஎஸ்கே ரசிகர்கள் என்பதால் அந்த ஜெர்சி அணிந்து மேட்ச் பார்க்க வந்தபோது எடுத்த புகைப்படம் இது.
Anoushka birthday celebration
மகளின் பிறந்தநாள் என்றால் எங்கு ஷூட்டிங்கில் இருந்தாலும் அதற்கு பிரேக் விட்டுவிட்டு பர்த்டே கொண்டாட ஆஜராகிவிடுவார் அஜித்குமார். அப்படி மகளின் 15வது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது எடுத்த அழகிய போட்டோ இது.
Anoushka with her Dad Ajith Kumar
ஹீரோயின் போல ஜொலிக்கும் அனோஷ்கா, தன்னுடைய தந்தை அஜித் குமார் உடன் அழகாக போஸ் கொடுத்தபடி எடுத்துக்கொண்ட அன்சீன் கிளிக் இது.
Anoushka with her mom Shalini
அம்மா சேலையிலும் மகள் மாடர்ன் டிரெஸ்ஸிலும் அழகில் போட்டிபோட்டுக் கொண்டு வந்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டனர். அப்போது எடுத்த லவ்லி போட்டோ இது.
இதையும் படியுங்கள்... Sridevi : என் மகளை கல்யாணம் பண்ணிக்கோங்க... பிரபல நடிகரிடம் ஓப்பனாக கேட்ட ஸ்ரீதேவியின் தாய்; யார் அந்த ஹீரோ?