- Home
- Gallery
- KGF பட இயக்குனர் பிரசாந்த் நீலுடன் கூட்டணி வைக்கப்போகும் அஜித்! ரசிகர்களுக்கு காத்திருக்கும் டபுள் ட்ரீட்!
KGF பட இயக்குனர் பிரசாந்த் நீலுடன் கூட்டணி வைக்கப்போகும் அஜித்! ரசிகர்களுக்கு காத்திருக்கும் டபுள் ட்ரீட்!
தல அஜித், KGF, சலார் போன்ற பிரமாண்ட படங்களை இயக்கி வரும் பிரஷாந்த் நீலுடன் இணைந்து பணியாற்ற உள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

thala ajith
மொழிகள் கடந்து, நாடுகள் கடந்து தளபதி விஜய்க்கு நிகரான ரசிகர்கள் பலத்தை கொண்டுள்ளவர் அஜித். இவரை பொது இடங்களில் ரசிகர்கள் பார்ப்பது மிகவும் அரிது என்றாலும்... சாதாரணமாக வெளிநாடுகளில் வெளியே வரும் போது தன்னை சந்தித்து, செல்ஃபி எடுத்துக்கொள்ள விரும்பும் ரசிகர்களின் ஆசையை நிறைவேற்றிய பின்னரே அந்த இடத்தில் இருந்து செல்லும் பண்பான நடிகர்.

சக நடிகர்களிடமும், மூத்த நடிகர்களிடமும் அன்பாக பழக கூடிய அஜித், தன்னிடம் உதவி என கேட்பவர்களுக்கு தட்டாமல் செய்பவர். தற்போது அஜித் இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில், 'விடாமுயற்சி' படத்தில் நடித்து வருகிறார். இறுதிக்கட்ட படப்பிடிப்புக்காக அஜித் அஜர்பைஜான் சென்றபோது, ஷாலினிக்கு ஏற்பட்ட திடீர் உடல்நல குறைவு காரணமாக அங்கு சென்ற இரண்டே நாட்களில் சென்னை திரும்பிய அஜித், தற்போது மீண்டும் படப்பிடிப்புக்காக வெளிநாடு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
Anjana Arjun: அர்ஜுனின் இரண்டாவது மருமகன் வெளிநாட்டவரா? தீயாக பரவும் அஞ்சனாவின் செல்ஃபி புகைப்படம்!
Ajith
'விடாமுயற்சி' திரைப்படத்தை, இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியிட லைகா நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதை தொடர்ந்து, அஜித் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் 'குட் பேட் அக்லீ' படத்திலும் நடித்து வருகிறார். இந்த படத்தின் 40 சதவீத காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது. இந்த படம் பொங்கலை குறிவைத்துள்ள நிலையில்... விரைவில் இப்படம் குறித்த மற்ற தகவலைகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படத்தை தொடர்ந்து அஜித் தன்னுடைய 64-ஆவது படத்தை இயக்குனர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் நடிக்க முடிவு செய்துள்ளதாகவும், இதற்கான பேச்சு வார்த்தை தற்போது நடந்துள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து, டிடி நெக்ஸ்ட் வெளியிட்டுள்ள செய்தியில், அஜித் இயக்குனர் பிரஷாந்த் நீலை சந்தித்து அடுத்தடுத்து நடிக்க உள்ள இரண்டு படம் குறித்து பேச்சு வார்த்தை நடத்தியுள்ளதாக கூறியுள்ளது. மேலும் இந்த இரண்டு படத்தையும் ஹோம்பலே பிலிம்ஸ் சார்பில் விஜய் கிரகந்தூர் தயாரிக்கவுள்ளார்.
இந்த இரண்டு படங்களில் முதல் பாகம், இரண்டாவது பாகமா? அல்லது தனி தனி படங்களா? என்பது குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை. இந்த படத்தின் பணிகள் 2025-ஆம் ஆண்டு துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுவதாகவும், பிரஷாந்த் நீல் பிரபாஸை வைத்து இயக்கவுள்ள 'சலார் 2' படப்பிடிப்பை முடிந்த பின்னர் அஜித் படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது. ஒருவேளை அஜித் KGF 3 படத்தில், யஷ்ஷுடன் இணைந்து நடிக்கவும் வாய்ப்புள்ளதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கிடையில், பிரசாந்த் நீல் 'சலார்: பாகம் 2 - சௌரியங்க பர்வம்' மற்றும் ஜூனியர் என்டிஆர் உடன் பெயரிடப்படாத படம் என அடுத்தடுத்து வரிசை கட்டி நிற்பதால், அஜித்துடன் இணைத்து 2025-ஆம் ஆண்டு பணியாற்றுவாரா? அல்லது அந்த திட்டம் தள்ளி போகுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.