- Home
- Gallery
- ஷாலினிக்கு என்ன ஆச்சு? மருத்துவமனையில் இருக்கும் மனைவி கையை பிடித்திருக்கும் அஜித்.. வைரலாகும் புகைப்படம்!
ஷாலினிக்கு என்ன ஆச்சு? மருத்துவமனையில் இருக்கும் மனைவி கையை பிடித்திருக்கும் அஜித்.. வைரலாகும் புகைப்படம்!
அஜித்தின் மனைவி ஷாலினிக்கு திடீர் என ஆபரேஷன் நடக்க உள்ளதாக கூறப்பட்ட நிலையில், அஜித் அவசர அவசரமாக அஜர்பைஜானின் இருந்து சென்னை திருப்பினார். தற்போது மருத்துவமனையில் இருக்கும் ஷாலினியுடன் அஜித் இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில், உச்ச நடிகராக இருக்கும் அஜித்... நடிப்பு, பைக் ரேஸ், கார் ரேஸ், துப்பாக்கி சுடுதல், ஆரோ மாடலிங் என தன்னை எந்நேரமும் பிசியாக வைத்திருந்தாலும், மனைவி மற்றும் தன்னுடைய குழந்தைகளுடன் நேரம் செலவிட தவற மாட்டார்.
குறிப்பாக வீட்டில் விசேஷம், பிள்ளைகள் மற்றும் மனைவியின் பிறந்தநாள் போன்ற சென்டிமெண்டான நாட்களில் இந்த உலகின் எந்த மூலையில் இருந்தாலும் தன்னுடைய குடும்பத்தினரை பார்க்க வந்தது விடுவார். இல்லை என்றால் தான் இருக்கும் இடத்திற்கு அவர்களை அழைத்து சென்று விடுவார். இந்த முறை தன்னுடைய மகளின் பிறந்தநாளை கூட, துபாயில் கப்பலில் தான் கொண்டாடினார் அஜித்.
Ajith
அஜித் தன்னுடைய இறுதிக்கட்ட படப்பிடிப்புக்காக, கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் சென்னையில் இருந்து அஜர்பைஜான் சென்றார். அங்கு ஒரு மாத காலம் படப்பிடிப்பு இருக்கும் என கூறப்பட்டது. ஆனால் போன வேகத்திலேயே திடீர் என சென்னை திரும்பினார். அஜித் தன்னுடைய பர்சனல் காரணத்திற்காக சென்னை வந்ததாக கூறப்பட்டது.
shalini ajith wedding anniversary
பின்னர் அஜித்தின் மனைவி ஷாலினிக்கு திடீர் என ஏற்பட்ட உடல்நல குறைவு காரணமாக, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும்... அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஆபரேஷன் செய்ய வேண்டும் என அறிவுறுத்தியதால் தான் அஜித் அவசர அவரசமாக சென்னை வந்தது தெரியவந்தது.
ஆனால் இது ஒரு மைனர் சர்ஜரி என்றே கூறப்படுகிறது. மற்றபடி அவருக்கு என்ன பிரச்சனை என்பது குறித்த மற்ற தகவல்கள் வெளியாகவில்லை. இந்த தகவல் வெளியானதில் இருந்தே ரசிகர்கள் பதற்றத்துடன் கேள்வி எழுப்பி வந்த நிலையில், தற்போது அஜித் ஷாலினி கையை மருத்துவமனையில் பிடித்திருப்பது போல் இருக்கும் புகைப்படத்தை வெளியிட அது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. ரசிகர்களும் ஷாலினி விரைவில் குணமடைய தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.