ஐஸ்வர்யா ராய் முதல் ஷாருக்கான் வரை.. துபாயில் சொந்தமாக வீடு வைத்திருக்கும் பிரபலங்கள்..
ஷாருக்கான், அனில் கபூர், பச்சன் மற்றும் பல பாலிவுட் பிரபலங்கள் துபாயில் சொந்தமாக வீடு வைத்திருக்கின்றனர். இதுகுறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

துபாய் என்பது பிரபலங்களுக்கான இரண்டாவது இல்லமாக துபாய் உள்ளது. ஷாருக்கான், அனில் கபூர், பச்சன் மற்றும் பல பாலிவுட் பிரபலங்கள் துபாயில் சொந்தமாக வீடு வைத்திருக்கின்றனர். இதுகுறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
நடிகர் ஷாருக்கான், துபாயின் பாம் ஜுமேராவில் பல கோடி மதிப்பிலான ஆடம்பர வில்லா வைத்துள்ளார். துபாயில் அவரின் சொத்து மதிப்பு சுமார் 18 கோடி மற்றும் 14,000 சதுர அடி பெரியது என்றும் கூற்ப்படுகிறது. 6 பெரிய படுக்கையறைகள், இரண்டு கட்டுப்படுத்தப்பட்ட கேரேஜ்கள், கடற்கரைக் காட்சியுடன் கூடிய ஒரு தனியார் குளம் உள்ளிட்ட பல ஆடம்பர வசதிகள் அவரின் வீட்டில் இருக்கிறதாம்.
நடிகர் சல்மான் கான், துபாயில் உள்ள புர்ஜ் கலிஃபாவிற்கு அருகில் உள்ள தி அட்ரஸ் டவுன்டவுனில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் உரிமையாளர் ஆவார். அங்கு அடிக்கடி செல்வதையும் அவர் வழக்கமாக வைத்திருக்கிறார்.
ஷில்பா ஷெட்டி குந்த்ரா
நடிகை ஷில்பா ஷெட்டிக்கும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவுக்கும் புர்ஜ் கலிஃபாவில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி 2016 இல் புர்ஜ் கலீஃபாவில் இரண்டு படுக்கையறைகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பை வைத்திருந்தார். பின்னர் அந்த வீட்டை விற்றுவிட்டு, புதிய வீடு ஒன்றை வாங்கினார். ஷில்பாவும் அவரது குடும்பத்தினரும் அடிக்கடி துபாய் செல்வதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர்..
ஐஸ்வர்யா ராய் பச்சன்
பாலிவுட்டின் முக்கியமான ஜோடியான ஐஸ்வர்யா ராய் பச்சன் மற்றும் அபிஷேக் பச்சன் துபாயில் உள்ள ஜுமேரா கோல்ஃப் எஸ்டேட்ஸில் உள்ள சரணாலய நீர்வீழ்ச்சியில் ஒரு ஆடம்பர வீட்டை வைத்திருக்கின்றனர். இருவரும் 2016 இல் அந்த ஆடம்பர வீட்டை வாங்கியதாக கூறப்படுகிறது.
அனில் கபூர்
அனில் கபூருக்கு ஜுமேரா கிராம வட்டத்தில் சொத்து உள்ளது. பாலிவுட் நடிகர் அனில் கபூர் துபாயில் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்துள்ளார். ரிட்ஸில் இரண்டு படுக்கையறைகள் கொண்ட பிளாட் ஒன்றை வாங்கினார்.
சஞ்சய் தத்
சஞ்சய் தத்துக்கு எமிரேட்ஸ் ஹில்ஸில் ஆடம்பர வீடு இருக்கிறது. சஞ்சய் தத்தின் ஃபேவரைட் இடங்களில் அவரின் துபாய் வீடு ஒன்று என கூறப்படுகிறது.