விஜய்யை விட டபுள் மடங்கு சொத்துக்கு சொந்தக்காரியாக இருக்கும் ஐஸ்வர்யா ராய்! அவரின் சொத்துமதிப்பு இத்தனை கோடியா
நடிகை ஐஸ்வர்யா ராய் இன்று தனது 50-வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், அவரின் சொத்து மதிப்பு மற்றும் சம்பள விவரம் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
aishwarya rai
1994-ம் ஆண்டு உலக அழகி பட்டம் பெற்ற பின் சினிமாவுக்கு ஹீரோயினாக எண்ட்ரி கொடுத்தார் நடிகை ஐஸ்வர்யா ராய். இவர் மணிரத்னம் இயக்கிய இருவர் படம் மூலம் தான் ஹீரோயினாக அறிமுகமானார். அப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஐஸ்வர்யா ராய்க்கு, அடுத்த ஆண்டே பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கிய ஜீன்ஸ் படத்தில் ஹீரோயினாக நடிக்க சான்ஸ் கிடைத்தது. அப்படத்தில் நடிகர் பிரஷாந்துக்கு ஜோடியாக நடித்தார் ஐஸ்வர்யா.
aishwarya rai, Abishek bachchan
ஜீன்ஸ் படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து ஐஸ்வர்யா ராய்க்கு கோலிவுட்டில் பட வாய்ப்புகள் குவியத் தொடங்கின. ஆனால் தனக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்தார் ஐஸ்வர்யா. அப்படி அவர் தேர்வு செய்து நடித்த படம் தான் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன். ராஜீவ் மேனன் இயக்கிய இப்படத்தில் அப்பாஸுக்கு ஜோடியாக நடித்தார் ஐஸ்வர்யா. இதையடுத்து மணிரத்னம் இயக்கிய குரு படத்தில் நடித்தபோது அபிஷேக் பச்சன் மீது காதல் வயப்பட்டார் ஐஸ்வர்யா.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
aishwarya rai daughter
ஐஸ்வர்யா ராய் - அபிஷேக் பச்சன் ஜோடிக்கு ஆராத்யா என்கிற பெண் குழந்தையும் உள்ளது. திருமணத்துக்கு பின்னர் பெரும்பாலும் இந்தி படங்களில் மட்டும் நடித்து வந்த ஐஸ்வர்யா ராய் அவ்வப்போது தமிழ் படங்களில் தலைகாட்டி வந்தார். குறிப்பாக கடந்த 2010-ம் ஆண்டு வெளிவந்த ராவணன் படத்துக்கு பின் தமிழில் நடிக்காமல் இருந்து வந்த ஐஸ்வர்யா ராய்யை தான் இயக்கிய பொன்னியின் செல்வன் படம் மூலம் மீண்டும் தமிழுக்கு அழைத்து வந்தார் மணிரத்னம்.
aishwarya rai birthday
பொன்னியின் செல்வனில் நந்தினி கதாபாத்திரத்தில் தனது வில்லத்தனமான நடிப்பால் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார் ஐஸ்வர்யா ராய். பொன்னியின் செல்வனுக்கு பின்னர் அடுத்தபட அறிவிப்பை வெளியிடாமல் இருக்கும் நடிகை ஐஸ்வர்யா ராய் இன்று தனது 50-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்து மழை பொழிந்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில் அவரது சொத்து மதிப்பு பற்றி தற்போது பார்க்கலாம்.
aishwarya rai net worth
அதன்படி நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு சுமார் 828 கோடி சொத்து உள்ளதாம். இது கோலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் விஜய்யின் சொத்து மதிப்பைவிட டபுள் மடங்காகும். நடிகை ஐஸ்வர்யா ராய் ஒரு படத்துக்கு ரூ.12 கோடி சம்பளமாக வாங்கி வருகிறார். இவரது ஆண்டு வருமானம் மட்டும் 80 முதல் 90 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. இந்தியாவின் பணக்கார நடிகைகள் பட்டியலில் முன்னணியில் இருப்பவர் ஐஸ்வர்யா ராய் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... இது தான்டா ரியல் கே.ஜி.எப்... மெர்சலான காட்சிகளுடன் வெளிவந்த சீயான் விக்ரமின் தங்கலான் டீசர் இதோ