சாரே கொலமாஸு... சூப்பர்ஸ்டாரை குஸ்தி வீரனாக மாற்றிய AI! வியக்க வைக்கும் fan made கிளிக்ஸ் இதோ
AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சூப்பர்ஸ்டாரை குஸ்தி வீரனாக மாற்றி மாஸ் காட்டியுள்ள ஃபேன் மேடு போட்டோஸ் வைரலாகி வருகிறது.
Rajinikanth AI image
வசீகர நடிப்பால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினரையும் கவர்ந்திழுத்த நடிகர் என்றால் அது ரஜினிகாந்த் தான். அதனால் தான் அவரை சூப்பர்ஸ்டார் என கொண்டாடுகிறார்கள். அண்ணாத்த படத்தின் தோல்விக்கு பின்னர் ரஜினியின் மார்க்கெட்டெல்லாம் காலி, அவர் சினிமாவில் இருந்து விலகிடலாம் என்றெல்லாம் விமர்சனம் செய்தவர்களுக்கு தன்னுடைய ஜெயிலர் படத்தின் வெற்றியின் மூலம் தரமான பதிலடி கொடுத்து வாயடைக்க செய்தார்.
Rajinikanth fan made photo
தற்போது 72 வயதிலும் அவருக்காக படம் பண்ண தயாரிப்பாளர்கள் கியூவில் நிற்கிறார்கள். அவர் நடிப்பில் தலைவர் 170 திரைப்படம் தயாராகி வருகிறது. இப்படத்தை த.செ ஞானவேல் இயக்குகிறார். இப்படத்தின் ஷூட்டிங் கேரளாவில் நடைபெற்று வருகிறது. இதற்கு அடுத்தபடியாக தமிழ் சினிமாவின் மோஸ்ட் வாண்டட் டைரக்டரான லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தலைவர் 171 திரைப்படத்தில் நடிக்க உள்ளார் ரஜினி. இந்த இரண்டு படத்துக்குமே அனிருத் தான் இசையமைக்க உள்ளார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
Rajinikanth AI click
இதுதவிர ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள லால் சலாம் என்கிற திரைப்படத்திலும் கேமியோ ரோலில் நடித்திருக்கிறார் ரஜினி. அப்படமும் வருகிற 2024-ம் ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு திரைக்கு வர உள்ளது. இப்படி கைவசம் மூன்று படங்களுடன் அடுத்தடுத்து பிசியாக நடித்து வரும் ரஜினியின் ஃபேன் மேடு புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி செம்ம வைரலாகி வருகின்றன.
Rajinikanth AI edited pic
AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சூப்பர்ஸ்டாரை குஸ்தி வீரனாக மாற்றி செம்ம மாஸாக எடிட் செய்யப்பட்டுள்ள இந்த புகைப்படங்கள் ஒரிஜினல் போலவே இருப்பதாக நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். சிலரோ இது AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எடிட் செய்யப்பட்ட புகைப்படங்கள் தலைவர் 170 படத்திற்காக நடத்திய போட்டோஷூட் என நினைத்து பகிர்ந்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... அனுமதி மறுப்பு... விஜய்யின் லியோ பட டிரைலருக்கு கடைசி நேரத்தில் செக் வைத்த போலீஸ் - அப்செட் ஆன தளபதி ரசிகர்கள்