ஜப்பான் கொடுத்த தர்ம அடி... அடுத்த பட வெற்றிக்காக கைதி பட பார்முலாவை பின்பற்றும் கார்த்தி..!
நடிகர் கார்த்தி நடித்த ஜப்பான் திரைப்படம் படுதோல்வியை சந்தித்துள்ள நிலையில், அவரின் அடுத்தபடம் குறித்த முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது.
karthi
நடிகர் கார்த்திக்கு கடந்த ஆண்டு மிகவும் வெற்றிகரமான ஆண்டாகவே அமைந்தது. ஏனெனில் கடந்தாண்டில் அவர் நடிப்பில் வெளிவந்த விருமன், பொன்னியின் செல்வன் 1 மற்றும் சர்தார் ஆகிய மூன்று படங்களுமே பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதோடு பாக்ஸ் ஆபிஸிலும் வசூலை வாரிக்குவித்தது. இதையடுத்து இந்த ஆண்டு முதல் பாதியில் கார்த்தி நடிப்பில் பொன்னியின் செல்வன் 2ம் பாகம் ரிலீஸ் ஆனது. இப்படமும் ரூ.300 கோடிக்கு மேல் வசூலித்து இருந்தது.
japan movie karthi
இதையடுத்து அவர் ஹீரோவாக நடித்த ஜப்பான் திரைப்படம் கடந்த நவம்பர் 10-ந் தேதி தீபாவளி விருந்தாக திரைக்கு வந்தது. ராஜு முருகன் இயக்கிய இப்படம் நடிகர் கார்த்தியின் 25-வது படம் என்பதால் இதற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் படம் வெளியான முதல் நாளே நெகடிவ் விமர்சனங்களை பெற்றது. இதனால் நான்கே நாட்களில் இப்படம் கணிசமான அளவு திரையரங்குகளை இழந்துள்ளது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
Karthi next movie
ஜப்பான் படத்தின் தோல்வியால் நடிகர் கார்த்தி மட்டுமின்றி அவரது ரசிகர்களும் அப்செட் ஆகி உள்ளனர். இதனால் அடுத்த படத்தில் எப்படியாவது ஹிட் கொடுக்க வேண்டும் என்கிற முனைப்பில் தீவிரமாக உழைத்து வருகிறாராம் கார்த்தி. இவர் நடிப்பில் அடுத்தடுத்து 2 படங்கள் தயாராகி வருகின்றன. இதில் ஒரு படத்தை சூது கவ்வும் படத்தின் இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கி வருகிறார். மற்றொரு படத்தை 96 பட இயக்குனர் பிரேம் குமார் இயக்குகிறார்.
Karthi, Premkumar
இதில் பிரேம் குமார் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படம் குறித்து தான் ஒரு ஹாட் அப்டேட் வந்துள்ளது. அதன்படி அப்படத்தில் கார்த்திக்கு ஜோடியே கிடையாதாம். நடிகர் கார்த்தி இதற்கு முன் ஜோடியே இல்லாமல் நடித்த திரைப்படம் கைதி. அப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டான நிலையில், தற்போது அதே பார்முலாவை பிரேம் குமார் படத்துக்கும் பாலோ பண்ணி இருக்கிறார் கார்த்தி. இப்படம் கார்த்திக்கு கம்பேக் படமாக அமையுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இதையும் படியுங்கள்... ஜோவிகா ஆபத்தான ரிலேஷன்ஷிப்ல இருக்கா... வனிதா மகள் மீதுள்ள ஆதங்கத்தை பிக்பாஸ் வீட்டில் கொட்டிய விசித்ரா