- Home
- Gallery
- ஒருபுறம் சந்தோஷம், ஒருபுறம் வருத்தம்: சர்வதேச டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்த விராட் கோலி!
ஒருபுறம் சந்தோஷம், ஒருபுறம் வருத்தம்: சர்வதேச டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்த விராட் கோலி!
தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான டி20 உலகக் கோப்பை 2024 தொடரின் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று 2ஆவது முறையாக டிராபியை வென்ற நிலையில் விராட் கோலி சர்வதேச டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

Virat Kohli Last T20 World Cup 2024
பார்படாஸில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டி20 உலகக் கோப்பை 2024 தொடரின் இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் முதலில் விளையாடிய இந்திய அணியானது விராட் கோலி மற்றும் அக்ஷர் படேலின் சிறப்பான ஆட்டத்தால் 176 ரன்கள் குவித்தது. இதில் அக்ஷர் படேல் 47 ரன்களில் ஆட்டமிழக்க, விராட் கோலி 76 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
Virat Kohli T20I Retirement
இந்தப் போட்டியில் 76 ரன்கள் எடுத்ததன் மூலமாக பல சாதனைகளை படைத்தார். இந்த தொடரில் 7 போட்டிகளில் விளையாடிய கோலி மொத்தமாக 75 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இன்றைய போட்டியில் 59 பந்துகளில் 76 ரன்கள் குவித்தார். மேலும், கடைசியாக கோலி விளையாடிய 10 டி20 போட்டிகளில் முதல் அரைசதம் இதுவாகும்.
IND vs SA T20 World Cup 2024
டி20 உலகக் கோப்பை 2024 இறுதிப் போட்டியில் அதிகபட்சமாக 76 ரன்கள் எடுத்துள்ளார். கடந்த 2014 ஆம் ஆண்டில் 77* ரன்கள் எடுத்திருந்தார். டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் மெதுவாக அரைசதம் அடித்த வீரர் என்ற மோசமான சாதனையையும் கோலி படைத்தார்.
IND vs SA T20 World Cup 2024
பின்னர் கடின இலக்கை துரத்திய தென் ஆப்பிரிக்கா அணியானது ஆரம்பத்தில் 2 விக்கெட்டுகளை இழந்தது. அதன் பிறகு குயீண்டன் டி காக் மற்றும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் இருவரும் இணைந்து சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்தனர். ஸ்டப்ஸ் 31 ரன்களில் ஆட்டமிழக்கவே, டி காக் 39 ரன்களில் நடையை கட்டினார். அதன் பிறகு ஹென்ரிச் கிளாசென் களமிறங்கி அதிரடியாக விளையாடினார்.
IND vs SA T20 World Cup 2024
அவர், 23 பந்துகளில் அரைசதம் அடித்து 52 ரன்களில் ஆட்டமிழந்தார். அப்போது, தென் ஆப்பிரிக்கா 16.1 ஓவர்களில் 151 ரன்கள் எடுத்திருந்தது. கடைசி 23 பந்துகளில் 27 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் டேவிட் மில்லர் மார்கோ யான்சென் இருவரும் விளையாடினர். இதில், பும்ரா கடைசியில் யான்சென் விக்கெட்டை எடுத்துக் கொடுத்தார்.
IND vs SA T20 World Cup 2024 Final
அதன் பிறகு கேசவ் மஹராஜ் களமிறங்கினார். கடைசி 2 ஓவர்களில் தென் ஆப்பிரிக்காவின் வெற்றிக்கு 20 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. 19ஆவது ஓவரை அர்ஷ்தீப் சிங் வீசினார். அந்த ஓவரில் வெறும் 4 ரன்கள் மட்டுமே கொடுத்தார். கடைசி ஓவரை ஹர்திக் பாண்டியா வீசினார். மில்லர் ஸ்டிரைக்கில் நின்றார். முதல் பந்தில் சிக்ஸருக்கு முயற்சிக்க பவுண்டரி லைனில் நின்றிருந்த சூர்யகுமார் அபாரமாக கேட்ச் பிடித்தார்.
Virat Kohli T20 World Cup 2024
அப்போதே இந்திய அணி வெற்றி பெற்றுவிட்டது. அதன் பிறகு வந்த கஜிஸோ ரபாடா 5ஆவது பந்தில் ஆட்டமிழக்கவே தென் ஆப்பிரிக்கா 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 169 ரன்கள் மட்டுமே எடுத்து 7 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
Virat Kohli Announces T20 Retirement
இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக இறுதிப் போட்டி உள்பட இந்தியா விளையாடிய 8 போட்டிகளிலும் வெற்றி புதிய சாதனை படைத்தது. இந்த தொடரில் இந்தியா ஒரு போட்டியில் கூட தோற்கவில்லை. கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்த இந்திய அணி தற்போது டி20 உலகக் கோப்பையை வென்று வரலாறு படைத்துள்ளது.
IND vs SA Final T20 World Cup 2024
இதன் மூலமாக 17 ஆண்டுகளுக்கு பிறகு 2அவது முறையாக டிராபியை வென்றுள்ளது. இதற்கு முன்னதாக 2007 ஆம் ஆண்டு தோனி தலைமையிலான இந்திய அணி முதல் முறையாக டிராபியை கைப்பற்றியது. இந்தப் போட்டியில் ஆட்டநாயகன் விருது வென்ற கோலி அதிர்ச்சி கொடுக்கும் வகையில் சர்வதேச டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
Virat Kohli T20I Retirement
கடந்த 2010 ஆம் ஆண்டு ஜூன் 12 ஆம் தேதி ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டியின் மூலமாக டி20 கிரிக்கெட்டில் அறிமுகமானார். இதுவரையில் 125 டி20 போட்டிகளில் விளையாடிய விராட் கோலி, 4188 ரன்கள் எடுத்துள்ளார். இதில் அதிகபட்சமாக 122* ரன்கள் எடுத்துள்ளார். இதில், ஒரு சதமும், 38 அரைசதமும் அடங்கும்.
Virat Kohli Last T20 World Cup 2024
டி20 ஓய்வு குறித்து விராட் கோலி கூறியிருப்பதாவது: இது எனது கடைசி டி20 உலகக் கோப்பை. இதைத்தான் நாங்கள் அடைய விரும்பினோம். கடவுள் மிகப்பெரியவர். இந்தியாவுக்காக விளையாடும் கடைசி டி20 போட்டி இதுதான். டி20 உலகக் கோப்பையை ஜெயிக்க விரும்பினோம். அதன்படியே நடந்துள்ளது. நாம் தோற்றாலும் நான் அறிவிக்கப் போவதில்லை. அடுத்த தலைமுறை டி20 விளையாட்டை முன்னோக்கி எடுத்துச் சென்று ஐபிஎல்லில் அவர்கள் விளையாடுவதைப் போன்று அற்புதங்களைச் செய்ய வேண்டும்.
T20 World Cup 2024 Champion
இந்திய அணியை இங்கிருந்து மேலும் கொண்டு செல்வார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஐசிசி போட்டியில் வெற்றி பெறுவதற்கு நீண்ட காலமாக காத்திருந்தோம். நான் மட்டும் அல்ல. ரோகித் சர்மா போன்ற ஒருவரைப் பாருங்கள். அவர் 9 முறை டி20 உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடியுள்ளார். இது எனது 6ஆவது டி20 உலகக் கோப்பை. அவரும் தகுதியானவர் தான்.
T20 World Cup 2024
போட்டிக்கு பிறகு நான் உணர்ந்த உணர்ச்சிகளை விளக்குவது கடினம். நான் என்ன மாதிரியான மனநிலையில் இருந்தேன் என்பது எனக்கு தெரியும். கடந்த சில போட்டிகளில் நான் விளையாடியதைப் பார்த்து எனக்கு என் மீது நம்பிக்கை இல்லை.
IND vs SA Final, T20 World Cup 2024
ஆனால், கடவுள் உங்களை ஆசிர்வதிக்கும் போது உங்களால் நினைத்து கூட பார்க்க முடியாத வகையில் சிறப்பாக விளையாட நேரிடும். அதனால்தான் நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். இது ஒரு அற்புதமான நாள் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.