தீபாவளி ரேஸில் அதிரடி மாற்றம்! ‘அயலான்’ அவுட்... ‘துருவ நட்சத்திரம்’ இன்
கவுதம் மேனன் இயக்கத்தில் சீயான் விக்ரம் நாயகனாக நடித்துள்ள துருவ நட்சத்திரம் திரைப்படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Dhruva natchathiram
கவுதம் மேனன் இயக்கத்தில் சீயான் விக்ரம் நாயகனாக நடித்துள்ள திரைப்படம் துருவ நட்சத்திரம். கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்படத்தின் பெரும்பாலான ஷூட்டிங் அந்த ஆண்டே எடுத்து முடிக்கப்பட்டது. இருப்பினும் சில பிரச்சனைகள் காரணமாக கிடப்பில் போடப்பட்ட இந்த திரைப்படம் கடந்த 5 ஆண்டுகளாக தொடங்கப்படாமல் இருந்தது. இதையடுத்து ரெட் ஜெயண்ட் மூவீஸ் தலையிட்டு இப்படத்தின் பிரச்சனையில் சுமூகமான முடிவு கண்டது.
Dhruva natchathiram release date
இதன்பின்னர் இப்படத்தின் பணிகளை கடந்த ஆண்டு முதல் மீண்டும் மேற்கொள்ள தொடங்கினார் கவுதம் மேனன். தற்போது அனைத்து பணிகளும் முடிவடைந்து படமும் ரிலீசுக்கு தயாராக உள்ளது. கடந்தமாதமே திரைக்கு வரும் என கூறப்பட்ட நிலையில், இப்படம் குறித்து எந்தவித அப்டேட்டும் வெளியாகாமல் இருந்ததால், ரசிகர்கள் அப்செட் ஆகினர். இந்த நிலையில், ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் தற்போது துருவ நட்சத்திரம் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளிவந்துள்ளது.
இதையும் படியுங்கள்... ரெளடி பேபிக்கு ரகசிய திருமணமா? பிக்பாஸ் இயக்குனருடன் மாலையும் கழுத்துமாக நிற்கும் சாய் பல்லவி - பின்னணி என்ன?
Ayalaan, Dhruva natchathiram
அதன்படி இப்படத்தை வருகிற நவம்பர் மாதம் தீபாவளி பண்டிகைக்கு திரைக்கு கொண்டுவர முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே தீபாவளி ரேஸில் கார்த்தியின் ஜப்பான், கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், சிவகார்த்திகேயனின் அயலான் ஆகிய படங்கள் இருந்தன. இதில் அயலான் படம் மட்டும் தீபாவளி ரேஸில் இருந்து விலகி உள்ளதாக கூறப்படும் நிலையில், அதற்கு பதிலாக விக்ரமின் துருவ நட்சத்திரம் களமிறங்க உள்ளதாக கூறப்படுகிறது.
Dhruva natchathiram Diwali release
துருவ நட்சத்திரம் படத்தில் நடிகர் விக்ரம் ஜான் என்கிற கேரக்டரில் நடித்துள்ளார். இதில் விக்ரமுக்கு ஜோடியாக ரித்து வர்மா நடித்திருக்கிறார். மேலும் ராதிகா சரத்குமார், சிம்ரன், திவ்யதர்ஷினி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து உள்ளார். இப்படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட உள்ளனர். அதன் முதல் பாகம் தான் வருகிற தீபாவளி பண்டிகைக்கு ரிலீஸ் ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... “ ஜெயிலர் படம் ரொம்ப சுமாரா தான் இருந்துச்சு.. ஆனா..” சக்சஸ் மீட்டில் உண்மையை உடைத்த ரஜினி..!