6 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் குவாலிஃபையர் 2ல் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு சென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான குவாலிஃபையர் 2 சுற்று போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வெற்றி பெற்றதன் மூலமாக 6 ஆண்டுகளுக்கு பிறகு வெற்றியை கடந்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
Sunrisers Hyderabad vs Rajasthan Royals, Qualifier 2
எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான குவாலிஃபையர் 2 போட்டி நடைபெற்றது. இதில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் முதலில் பேட்டிங் செய்து 175 ரன்கள் குவித்தது.
Sunrisers Hyderabad vs Rajasthan Royals, Qualifier 2
டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில், ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி அடித்த நிலையில், 12 ரன்கள் எடுத்து அபிஷேக் சர்மா முதல் ஓவரிலேயே ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ராகுல் திரிபாதி அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தார். அவர், 15 பந்துகளில் 5 பவுண்டரி, 2 சிக்ஸர் உள்பட 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
Sunrisers Hyderabad vs Rajasthan Royals, Qualifier 2
இவரைத் தொடர்ந்து வந்த எய்டன் மார்க்ரம் ஒரு ரன்னில் நடையை கட்டினார். டிராவிஸ் ஹெட் 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். நிதிஷ் ரெட்டி 5 மற்றும் அப்துல் சமாத் 0 ரன்னிலும் நடையை கட்டினர். ஹென்ரிச் கிளாசன் மட்டும் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தார். அவர், 34 பந்துகளில் 4 சிக்ஸர் உள்பட 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
Sunrisers Hyderabad vs Rajasthan Royals, Qualifier 2
அதன் பிறகு வந்த ஷாபாஸ் அகமது 18 ரன்களில் வெளியேற, கடைசியில் பேட் கம்மின்ஸ் மற்றும் ஜெயதேவ் உனத்கட் இருவரும் தலா 5 விக்கெட்டுகள் எடுத்தனர். இறுதியாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்கள் எடுத்துள்ளது. பவுலிங்கைப் பொறுத்த வரையில் ஆவேஷ் கான் மற்றும் டிரெண்ட் போல்ட் தலா 3 விக்கெட்டுகள் கைப்பற்றினர். சந்தீப் சர்மா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.
Sunrisers Hyderabad vs Rajasthan Royals, Qualifier 2
பின்னர் கடின இலக்கை துரத்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங் செய்தது. இதில், ஆரம்பத்திலேயே ராஜஸ்தான் ராயல்ஸ் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. டாம் கோஹ்லர் காட்மோர் 10 ரன்களில் ஆட்டமிழக்க, ஜெய்ஸ்வால் 42 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சஞ்சு சாம்சன் 10 ரன்களில் வெளியேறினார். ரியான் பராக் 6 ரன்னிலும், ரவிச்சந்திரன் அஸ்வின் 0, ஷிம்ரன் ஹெட்மயர் 4, ரோவ்மன் பவல் 6 ரன்களிலும் வெளியேறினர்.
Sunrisers Hyderabad vs Rajasthan Royals, Qualifier 2
கடைசி வரை போராடிய துருவ் ஜூரெல் 35 பந்துகளில் 7 பவுண்டரி, 2 சிக்ஸர் உள்பட 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியாக ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்கள் எடுத்து 36 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த தோல்வியின் முலமாக ராஜஸ்தான் ராயல்ஸ் தொடரிலிருந்து வெளியேறியது.
Sunrisers Hyderabad vs Rajasthan Royals, Qualifier 2
அதோடு 11 ஆண்டுகளுக்கு பிறகு குவாலிஃபையர் 2 சுற்றுடன் ராஜஸ்தான் ராயல்ஸ் வெளியேறியிருக்கிறது. இதற்கு முன்னதாக 2013 ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்து வெளியேறியது.
Sunrisers Hyderabad vs Rajasthan Royals, Qualifier 2
இந்த நிலையில், ஹைதராபாத் அணியின் பேட்ஸ்மேன்கள் ஆட்டமிழந்த போது சோகத்துடன் இருந்த காவ்யா மாறன், ராஜஸ்தான் வீரர்களை அடுத்தடுத்து ஆட்டமிழக்கச் செய்து வெற்றியை நோக்கி சென்ற போது டான்ஸ் ஆடி கொண்டாடினார். கால் இரண்டும் தரையில் இல்லாத நிலையில் துள்ளி குதித்து கொண்டாடி மகிழந்தார். இறுதியில் வெற்றி உறுதியான நிலையில், தனது அப்பாவுடன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார். இது தொடர்பான வீடியோ, புகைப்படங்கள் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.
Sunrisers Hyderabad vs Rajasthan Royals, Qualifier 2
இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலமாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 6 ஆண்டுகளுக்கு பிறகு இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. இதற்கு முன்னதாக கடந்த 2018 ஆம் ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு சென்றது. நாளை 26 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டி நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.